விவசாயிடம் பட்டா மாற்ற லஞ்சம் 


திருவண்ணாமலை மாவட்டம்  சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகன்  சகாதேவன் வயது (40) . இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரின் வீட்டின் எதிரே உறவினர் ஷாரிகிருஷ்ணன் (40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த சவ்பக்கியம் என்பவரின் நிலைத்தை பெற்றுள்ளார். அதில் சில உட்பிரிவுகள் உள்ளதால் ஷாரிகிருஷ்ணன் வாங்கிய நிலம் கூட்டு பட்டாவில் உள்ளதால் இதனால் பட்டா மாற்றம் செய்து தரும்படி சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஷாரிகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்து சகா தேவனிடம் தெரிவித்துள்ளார். இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். பிறகு நில அளவையர் தீனதயாளனை அணுகியுள்ளார்.  அதற்கு அவர், ‘நீங்கள் கிரயம் பெற்றால் மட்டும் போதுமா ஏன் என்னை வந்து பார்க்கவில்லை’ என கேட்டதாக கூறப்படுகிறது.


 




லஞ்சம் கேட்ட நில அளவையர்


கூட்டு பட்டாவில் 3 பேர் உள்ளனர். மூன்றுபேரும் சேர்ந்து  ரூபாய் 12 ஆயிரம் கொடுத்தால் பட்ட மாற்றம் செய்து தருவதாக கூறி அனுப்பியுள்ளார்.  லஞ்சம் கேட்டதும் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் தருகிறோம். மீதமுள்ள பணத்தை பட்டா மாற்றம் செய்தும் தருகிறோம் என கூறியுள்ளார். இந்நிலையில் லஞ்சப் பணம் தர விரும்பாத சகாதேவன் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து, புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய்  நோட்டுக்களை சகாதேவனிடம்  கொடுத்து அனுப்பி உள்ளனர்.




நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழுப்பு போலீசார் 


சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த நிலவை அளவியர் தீனதயாளனிடம் அந்த ரூபாய் ஐந்தாயிரம் 2 பெரும்  கொடுத்தனர். ரசாயனம் தடவிய ரொக்க பணத்தை நில அளவையர் தீனதயாளன் பெரும்போது மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்  நில அளவையர் தீனதயாளனை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீனதயாளனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ரூபாய் ஐந்தாயிரம் பெற்று நில அளவையர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கைதான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.