திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள திருநீலகண்ட தெருவை சேர்ந்தவர் சவுத்ரி ராஜன் வயது (50). இவர் உரக்கடை வியாபாரி, இவருக்கு சொந்தமாக 2 லோடு ஆட்டோக்கள் உள்ளது. இவர் பொன்னூர், வணக்கம் பூண்டி, சித்தருக்காபுதூர், அசானா பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்கும் நூல்களை 2004-ஆம் ஆண்டு முதல் விநியோயகம் செய்து வருகிறார். மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட கைத்தறி சேலைகளை காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் உள்ள கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு பணியையும் சவுத்ரி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அரசின் இலவச சேலை வழங்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களில் இருந்து தலா 100 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட சேலைகள் இவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதனை அறிந்தும் முன்னுரை சேர்ந்த தெள்ளார்  யூனியன் கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த எம்புராஜ் தலைமையில் நெசவாளர்கள் சேகர், வெங்கடேசன், தயாளன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர்  சவுத்ரி வீட்டை சுற்றி வளைத்தனர்.

Continues below advertisement

துணை தாசில்தார் காவல்துறையினர் திடீர் சோதனை 

மேலும் இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல் துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும், நெசவாளர் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து துணை தாசில்தார் ஆனந்தகுமார், துணை ஆய்வாளர் முருகன் ஆகியோர் அங்கு வந்து சவுத்ரி ராஜன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1500-க்கும் அதிகமான சேலைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் துணை தாசில்தார் ஆனந்த் குமரன் மற்றும் துணை ஆய்வாள முருகன் ஆகியோர் நடத்திய விசாரணையில் பொன்னோர் கூட்டுறவு சங்க மேலாளர் ராணி தான் சேலை வீட்டில் வைக்கும் படி கூறியதாக சவுத்ரிராஜன் தெரிவித்தார். இதனை அடுத்து கூட்டுறவு சங்க மேலாளர் துணை தாசில்தார் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த சேலையிக்கும்  எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்தார்.  இதனால் சவுத்ரிராஜன் வீட்டில் சேலைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு  துணை தாசில்தார் சீல் வைத்தார்.  இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து நெசவாளர்களிடம் பேசுகையில்; 

சேலைகள் தயாரிப்பதற்காக நெசவாளர்களுக்கு அரசு நூல் வழங்கப்படும், அவற்றைக் கொண்டு தினமும் நெசவாளர்கள் தலா நான்கு சாலைகள் உருவாக்கி சேலை ஒன்றுக்கு 80 ரூபாய் கூலி பெறுவார்கள். இவ்வாறு நாளொன்றுக்கு 320 வரை வருமானம் கிடைக்கும். ஆனால் பொண்ணு கூட்டுறவு சங்க மேலாளர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் அரசு வழங்கும் நூலை வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்துவிட்டு, குறைந்த எண்ணிக்கையிலான நெசவாளர்களுக்கு மட்டும் நூல் வழங்கி எல்லோருக்கும் நூல் வழங்கியதாக கணக்கு காட்டுவார்.  அதேபோன்று  திருவள்ளுவர் மாவட்டம் ஆர்கே பேட்டை மற்றும் ஆந்திர மாநிலம் நகரி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனம் இருந்து பல நூறு ரூபாய்க்கு குறைவான சேலைகளை கொள்முதல் செய்து அரசின் இலவச சேவை வழங்கும் திட்டத்திற்கு 250 ரூபாய் வீதம் கொடுக்கின்றனர். இதன் மூலம் அரசு வழங்கும் நூலை விற்பனை செய்து அதிலும் தனியார் நிறுவனதிலிருந்து குறைந்த விலைக்கு சேலைகள் கொள்முதல் செய்து அரசுக்கு வழங்குவதிலும் அதிக லாபம் பார்க்கின்றனர். இதனால் நெசவாளர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை ,இது போன்ற முறைகேடு செய்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறினார்.

Continues below advertisement