திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையம் குமரன் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி. இவருடைய மனைவி புஷ்பா. இந்த தம்பதியினர்  2 மகன்களுடன் வசித்து வருகின்றனர். மேலும் அதே கிராமத்தில் குமரன் நகர் 2-வது தெருவில் சீனிவாசன், இவருடைய மனைவி கீர்த்தனா இந்த தம்பதியினர் 2-வயது ஆண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சீனிவாசன் அவருடைய மனைவி  கீர்த்தனா தம்பதியினரின் 2 வயது குழந்தை வீட்டின்  எதிரில் உள்ள காலிமனையாக உள்ள  இடத்தில் சிறுநீர் கழித்துள்ளதாக கூறப்படுகின்றன. குழந்தை சிறுநீர் கழித்ததை பார்த்த  முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி, தந்தை சீனிவாசன் கீர்த்தனா தம்பதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது,




குழந்தை சிறுநீர் கழித்ததால் அம்மாவை கத்தியால் குத்திய முன்னாள் ராணுவ வீரர்  


இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிடித்து சமரசம் செய்து சம்பவ இடத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில்  முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி இரவு முழுவதும் சீனிவாசன் குடும்பத்தின் மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. நேற்று காலையில் முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி திடீரென தன்னுடைய கத்தியை எடுத்துக்கொண்டு சீனிவாசன் வீட்டின் முன்பு சென்று கூச்சலிட்டுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனா வெளியே வந்துள்ளார் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாகவும் திட்டி திடீரென கையில் இருந்த கத்தியால் கீர்த்தனாவின் வலது கையை வெட்டியுள்ளார். திடீரென அங்கு வந்த சீனிவாசன் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து முன்னாள் ராணுவ வீரரை தாக்க முயன்றுள்ளனர்.  அப்போது அதே பாகுதியில் முன்னாள் ராணுவ வீரர் உறவினரும் இருந்துள்ளனர்.




சிறுநீர் கழித்த விவகாரத்தால் 7 பேர் மீது வழக்கு பதிவு 


அப்போது  இருதரப்புக்கும் இடையே  வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டு சுப்பிமணியனிடம் இருந்த கத்தியை பறித்து சீனிவாசன் கீர்த்தனா தரப்பினர் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி புஷ்பாவின் முகம், கை, கால் பகுதியில் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த கீர்த்தனா, புஷ்பா, சுப்பிரமணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தகவலிறிந்த வந்த கண்ணமங்கலம் காவல்துறையினர்  இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கீர்த்தனா தரப்பினர் மீது 4-பேர் மீதும் புஷ்பா தரப்பினர் மீது 3-பேர் மீது கொலை வெறி தாக்குதல் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 3-பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி அருகே 2 வயது குழந்தை காலிமனை இடத்தில் சிறுநீர் கழித்தது தொடர்பாக இருதரப்பு மோதலில் 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு கத்திகுத்து சம்பவம் கண்ணமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.