திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 12 தாலுகாக்கள் உள்ளது. அதில் பல தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் சில முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளனர்.
உயர் அதிகாரிகள் பேசுகையில்
உங்கள் எல்லைக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் என்ன நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு நீங்கள் தான். ஆனால் உங்களுக்கு அந்த பொறுப்பு சிறிதும் கூட இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் மக்கள் மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறீர்கள். அதையும் தாண்டி ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் செல்போனில் தகவல் கூறிவிட்டு அமைதியாக இருந்து விடுகிறீர்கள். இது முழுக்க முழுக்க தவறு உதாரணமாக ஒரு கிராமத்தில் போதைப்பொருளோ அல்லது சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர் யாரேனும் இருந்தால் அது பற்றி தகவலை முதலில் தெரிவிப்பது நீங்களா தான் இருக்க வேண்டும்.
இது தவிர மோசமான சம்பவம் நிகழ்ந்து அதை மற்றவர்கள் சொல்லி அதன் பிறகு எங்களுக்கு தெரிய வருகிறது. இதற்கு தான் நிர்வாக அலுவலர் என்ற பொறுப்பில் நீங்கள் உள்ளீர், இதுவரை உங்கள் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் எது எப்படி நடந்ததோ போகட்டும். மேலும் சுற்றி வளைத்து நான் பேச விரும்பவில்லை, எந்த ஒரு கிராமத்திலும் சாராயம் விற்பவர்களோ அல்லது காய்ச்சபவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் எங்களுக்கும் மதுவிலக்கு அமலாக பிரிவு போலீசாருக்கும் உடனடியாக தகவல் கொடுங்கள். அப்படி தகவல் தெரிவித்தீர்கள் என்றால் அவர்களை உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைக்கலாம், அதன் பிறகு சாராயம் என்பது இருக்காது. கள்ளக்குறிச்சி போன்று நமது மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் விபரீதம் நடந்தால் அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தான் முதலில் விசாரணை நடத்தப்படும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக இதை நாங்கள் சொல்லவில்லை எந்த காரணத்தைக் கொண்டும் நீங்கள் இருக்கும் பகுதியில் கள்ளச்சாராயமோ அல்லது போதைப்பொருளோ விற்பனை செய்யக்கூடாது.
அப்படி விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களுக்கு தகவல் மட்டும் கொடுங்கள் நீங்கள் போய் அவர்களிடம் எதையும் கேட்க வேண்டாம். நீங்கள் தகவல் கொடுத்தீர்கள் என்றால் அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஒவ்வொரு கிராமத்திலும் பெட்டி கடைகளில் ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் இன்னமும் தங்கு தடையின்றி விற்கப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றன. அதை தடுத்தீர்கள் என்றாலே மாணவர்கள் சமுதாயம் சீர் பெறும் அது மட்டும் இன்றி கல்வியில் முன்னேற்றம் அடையும். அதன் பிறகு வரக்கூடிய நாட்கள் எந்த பிரச்சனையும் இன்றி செல்லும் அதை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கும் இது தான் நிலைமை என அறிந்து கொண்டு போதைப் பொருளையோ அல்லது சாராயத்தையோ அனுமதிக்கப்படாமல் தகவல் கொடுங்கள் என இவ்வாறு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உயரதிகாரிகள் மூலம் கிரமநிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது வருவாய் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.