திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 1433-ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) 19.06.2024 முதல் 28.06.2024 வரை (இடையில் வரும் சனி, ஞாயிறு நீங்கலாக) கீழ்குறிப்பிட்டுள்ள அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. அதன் விவரம் பின் வருமாறு.


வட்டம் வருவாய் தீர்வாய அலுவலர்கள் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாள்


19.06.2024 - 25.06.2024


1 வெம்பாக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருவண்ணாமலை.


19.06.2024 - 21.06.2024


2 தண்டராம்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் திருவண்ணாமலை.


19.06.2024 - 28.06.2024


3 வந்தவாசி சார் ஆட்சியர் செய்யார் 


19.06.2024 - 24.06.2024


4 சேத்பட் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருவண்ணாமலை


19.06.2024 - 27.06.2024


5 திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் திருவண்ணாமலை.


19.06.2024 - 25.06.2024
6 போளூர் வருவாய் கோட்ட அலுவலர் ஆரணி 


19.06.2024 - 21.06.2024


7 கீழ்பென்னாத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)


19.06.2024 - 25.06.2024


8 செங்கம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருவண்ணாமலை


19.06.2024 - 25.06.2024


9 ஆரணி மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருவண்ணாமலை.


19.06.2024 - 28.06.2024


10 செய்யார் உதவி ஆணையர் (கலால்) திருவண்ணாமலை.


19.06.2024 - 21.06.2024


11 கலசபாக்கம் தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) திருவண்ணாமலை.


19.06.2024 - 20.06.2024


12 ஜமுனாமரத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருவண்ணாமலை



எனவே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 19.06.2024 முதல் 28.06.2024 வரை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம், மாவட்ட மற்றும் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மனு நீதி நாள் கூட்டம் மற்றும் கோட்ட அளவில் நடைபெறும் மாற்று திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் ஆகியன நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது குறை தொடர்பான மனுக்களை மேற்படி தினங்களில் தொடர்புடைய வட்டத்தில் ஜமாபந்தி நடத்தும் அலுவலர்களிடம் கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.