துரிஞ்சலாறு உபவடிநில திட்டம் (Phase-IV) பணி துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். உடன் மாநில தடகள சங்க துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம் உள்ள சாத்தனூர் அணை இடதுபுறக் கால்வாய் எல்.எஸ்.26.80 முதல் 35.20 கிமீ வரை 15R   பகிர்மான கால்வாய் எல்.எஸ். 0 முதல் 6.90 கி.மீ வரை மற்றும் 11R (A) பகிர்மான கால்வாய் எல் எஸ். 0 முதல் 5.46 கி.மீ வரை கால்வாய்களை புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணியினை மேற்கொள்ள துரிஞ்சலாறு உபவடிநில திட்டத்தின் கீழ் (Phase - IV) அரசாணை எண் 273 நீர்வளத் (WR1) துறை நாள்10.11.2022 ன்படி ரூ.7.29 கோடி மதிப்பில் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு தலைமைப் பொறியாளர் நீவது சென்னை மண்டலம்  RRNo. 58 CE,CR/ 2022-2023-ன்படி தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டது. மேற்கண்ட பணியில் சாத்தனூர் அணை இடதுபுறக் கால்வாய் எல்.எஸ்.26.80 முதல் 35.20 கீ.மீ வரை உள்ள பழுதடைந்த பகிர்மான கால்வாய் பகுதிகளை துர்வாருதல் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


 




15R  பகிர்மான கால்வாய் எல்.எஸ்.0.00 முதல் 6.90 கிமீ வரையுள்ள கால்வாயில் என் 2.58 முதல் 6.90 கி.மீ வரை கால்வாயினை தூர்வாரி மண் கால்வாயினை கான்கிரீட் லைனிங் செய்யும் பணி பழுதடைந்த நேரடி பாசன மதகுகளை பழுது பார்த்தல் பலவீனமாக உள்ள கால்வாய் கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 11R (A) கால்வாய் என்.எஸ்.0.00 முதல் 5.45 கி.மீ வரையுள்ள கால்வாயில் எல்.எஸ்.1.08 முதல் 5.46 கி.மீ கால்வாயினை தூர்வாரி மண் கால்வாயினை கான்கிரீட் லைனிங் செய்யும் பணி பழுதடைத்த நேரடி பாசன மதகுகளை பழுது பார்த்தல் பலவீனமாக உள்ள கால்வாய் கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது கண்காணிப்பு பொறியாளர் நீ.வ.து. பெண்ணையாறு வடிநில வட்டம் மூலம் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு 15.03.2024 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.


 




சாத்தனூர் இடதுபுற 15(R) பகிர்மான கால்வாயில் மேற்கொள்ளப்படும் பணிகள் மூலம் அரடாப்பட்டு காட்டாப்பூண்டி பெரியகல்லப்பாடி மற்றும் பவித்திரம் ஆகிய 4 கிராமங்களில் உள்ள 1642 ஏக்கர் நிலப்பாசன வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது. சாத்தனூர் இடதுபுற 11R (A)பகிர்மான கால்வாயில் மேற்கொள்ளப்படும் பணிகள் மூலம் தலையாம்பள்ளம், நவம்பட்டு, அல்லிக்கொண்டாம்பட்டு, தச்சம்பட்டு, காட்டாம்பூண்டி, பெரியக்கல்லப்பாடி மற்றும் சக்கரத்தாண்மடை ஆகிய 7 கிராமங்களில் உள்ள 1546 ஏக்கர் நிலம் பாசனவசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.


மேற்கண்ட பணிகளின் மூலன் மொத்த ஆயக்கட்டு 3188 ஏக்கர் நிலம் பாசனவசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் (சாத்தனூர் அணை) ராஜாராமன், உதவி பொறியாளாகள் ராஜேஷ், ஸ்ரீசெல்வ பிரியன், பாசன சங்க பிரதிநிதிகள், அரடாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.