மின்விபத்தில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது, எப்படி மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்து திருவண்ணாமலை மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் பழனிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

Continues below advertisement

இதுதொடர்பாக திருவண்ணாமலை மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் பழனிராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 

சமீப காலமாக மின்விபத்து காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின் நுகர்வோரின் அறியாமை காரணமாக மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு  நிகழ்கிறது. இதை தவிர்க்கும் பொருட்டு இப்போது புதிய மின் இணைப்புகளில் ஆர்சிசிபி சர்க்யூட் எனும் உபகரணத்தை பொருத்தி மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மேலும் ஆர்சிசிபி உபகரணமானது மின் இணைப்பு வளாகத்தில் ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து மின் விபத்திலிருந்து பாதுகாக்கும் கருவியாகும். எனவே ஆர்சிசிபி உபகரணம் பொருத்தப்படாத பழைய மின் இணைப்புகளில் இதை பொருத்த வேண்டும். இதனால் உயிரிழப்புக்கள் தடுக்கப்படும். இது தவிர வீடுகளில் உபயோகிக்கும் சிங்கிள் பேஸ் மின்சாரம் உபகரணங்களான கிரைண்டர், அயன் பாக்ஸ், மிக்ஸி, வாட்டர் பம்ப், வாட்டர் ஹீட்டர், குளிர்சாதன பெட்டி, போன்ற அனைத்தும் 3 பின் சாக்கெட் மூலமாக பொருத்த வேண்டும்.

Continues below advertisement

மின்கம்பத்தில் செல்லப்பிராணிகளை கட்டிவைக்க கூடாது 

மூன்றாவது புவியிடப்பட்ட வேண்டும். மேலும் எல்லாம் மூன்று பின் சாக்கெட்டுகளில் மூன்றாவது பின்னை அனைத்துமே  சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மின் அதிர்வு மற்றும் மின் விபத்தை தவிர்க்கலாம். மேலும் ஈரமான கைகளால் மின் சுச்சிகளை பயன்படுத்தக் கூடாது. வீட்டு  விலங்குகளான ஆடுகள், மாடுகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பிகளிலோ அல்லது மின் பாதைக்கு கீழ் பகுதிகளை மின்சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பிகளில் கட்டி வைக்ககூடாது. அது மட்டும் இன்றி அனுமதியின்றி மின்வேலி அமைப்பதும் குற்றச் செயலாகும். மக்கள் தங்களின் மின் இணைப்பு புகழில் தரமான ஐஎஸ்ஐ முத்தரையிட்ட மின் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் எவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.