திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பட்டு வேட்டியுடன் சக ஊழியர்களோடு இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர் ரிஷப் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தொகுப்பாளராக இருக்க அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதவி பாகுபாடின்றி உற்சாகமாக சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இந்தப் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான உறியடி விழாவில். உறியடி பானைக்குள் என்ன போடுவது என்று தெரியாமல் சாக்லேட்டை போடுவதா பூசணிக்காய் போடுவதா தண்ணீர் ஊற்றுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.


 




பின்னர் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீர் ஊற்றுங்கள் பரவாயில்லை என்று கூறியதை தொடர்ந்து தண்ணீரை ஊற்றி விழா தொடங்கியது. உறியடி விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான பட்டு வேட்டி கட்டிய மைனர் என்பதை போல் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர் ரிஷப் கண்களை கட்டிய சக அதிகாரிகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கம்பை கையில் கொடுத்து திசை மாற்றி சுற்றிவிட்டார். அப்படி இருந்தும் திட்ட இயக்குனர் திட்டமிட்டு குறிவைத்து உறியடிப்பானையை உடைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களின் மனைவி நந்தினி அவர்கள் உறியடிப்போட்டியில் பங்கேற்க அங்கிருந்தவர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் தனது மனைவியாக இருந்தாலும் போட்டியில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் சரியாக கருப்பு துணியால் கண்களை கட்டினார். 


 




பின்னர் ஆட்சியர் முருகேஷ் மனைவி நந்தினியை சரியாக அடிக்க வேண்டும் என்று மூன்று சுற்று சுற்றி சரியான திசையில் நிறுத்தி ஆவலோடு உரியடி விழாவை பார்த்த ரசித்தார். மாவட்ட ஆட்சியரின் மனைவி நந்தினி சில வினாடிகளிலேயே உரியடிப்பானையை இரண்டே அடியில் உடைத்தார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினிக்கும் கருப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்டு போட்டியில் பங்கேற்றார். பாவம் வருவாய் அலுவலரை சுற்றி விட்டவர்கள் திசை தெரியாமல் சுற்றி விட்டதால் அங்கும் இங்கும் சுற்றிய வரை பார்த்து சக அதிகாரிகள் கமெண்ட் கொடுக்கவே சரியாக பானையை உடைத்தார். தொடர்ந்து விழாவில் மியூசிக்கல் சேர் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கரும்பு சாப்பிடும் போட்டி, லெமன் ஸ்பூன் போட்டி, கோலப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகமே சமத்துவ பொங்கல் திருவிழா கோலம் பூண்டது.