திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தன்வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடலை அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சிறுமியின் கர்ப்பம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியின் வயிற்றில் இருந்த கருவின் டிஎன்ஏவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது கிளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ் வயது (27), இவர்  விவசாயம் செய்து வருகிறார். 


 




இவர், மீது காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். மேலும், சதிஷீடம்  டிஎன்ஏவை பறிமுதல் செய்து பரிசோதனையில் உட்படுத்தியதில் அதிர்ச்சி காரமான தகவலாக சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம்  அவர்தான் என்பது தெரியவந்தது. தற்கொலை வழக்கை மாற்றம் செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.  இவர் மேலும், கடந்த 21.10.2020 அன்று அந்த சிறுமியை மிரட்டி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என அச்சுறுத்தி அனுப்பியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு துடித்துள்ளார். எனவே, சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதித்திருப்பது தெரியவந்தது.


 




பின்னர் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கண்ணீருடன் தெரிவித்ததால், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சதீஷிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சிறுமி என்ன செய்வது என்று அறியாமல் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சதீசுக்கு, வாழ்நாள் முழுவதும்  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் சதீஷை காவல்துறையினர்  கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.