நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்காந பக்தர்கள், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பல லட்சம் பக்தர்களும் வருகை புரிவார்கள் . தற்போது தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்கின்றனர். சமீபத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளிலும் பல லட்ச பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டுகிறது. நாள்தோறும் கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலபாதையொட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் ஏராளமான மான்களை பொது மக்களும், குழந்தைகளை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். ஆனால் மான்களை பார்த்து ரசிப்பதில் மட்டும் ஈடுபட்ட பக்தர்கள் சமீபகாலமாக அவற்றை தங்கள் அருகில் வர வைப்பதற்காக கையில் வைத்திருக்கும் பிஸ்கட், கடலை மிட்டாய், சாக்லேட் உள்ளிட்ட பல தின்பண்டங்களை மான்களுக்கு வீசி வருகின்றனர். இதனால் அவை கூட்டம் கூட்டமாக சாலை ஓரமாக வருவதால் நாய்களிடம் சிக்கி சில மான்கள் பலியாகும் பரிதாபம் ஏற்படுகிறது.
மானுக்கு உணவு வழங்குவதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த நிலையில் கிரிவலம் வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கிரிவலப் பாதையில் சாலையோரம் கூட்டம் கூட்டமாக இருந்த மான்களை கண்டதும் அவற்றை தங்கள் அருகில் வரவழைப்பதற்காக தாங்கள் வைத்திருந்த பிஸ்கட்டுகள், தாங்கள் வைத்திருந்த சாதம் ,கடலைமிட்டாய், வாழைப்பழம்,ஆகிய தின்பண்டங்களை வனப்பகுதிக்குள் வீசினர். அதே நேரம் வனவிலங்குகளுக்கு உணவளிப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை கூறி வருகிறது. ஆனால் இங்கு மாவட்ட வன அலுவலகம் இருந்தும் மான்களுக்கு ஆபத்தான செயற்கை உணவுகள் வழங்குவதை தடுக்க வனத்துறையினர். எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள், இதனால் நாளுக்கு நாள் மான்களுக்கு செயற்கை உணவு வழங்குவது அதிகரித்து வருகிறது. ஆனால் வனத்துறையினர் வந்து சென்று அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை வனத்துறையினர் அலட்சியமாக இருப்பதால் மான்களுக்கு ஆபத்து நிலவுகிறது. உணவு வழங்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வனத்துறை தவறுவதால் மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி கிரிவலப் பாதையில் மான்களுக்கு உணவு வழங்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எல்லா தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கார்த்திகேயனிடம் பேசுகையில்;
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு நாளுக்கு நாள் பல்வேறு பகுதியில் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்துவருகிறது. இவர்கள் அனைவருமே கிரிவலம் செல்லும்போது செங்கம் செல்லும் பாதையில் இருந்து கிரிவலப்பாதை பிரியும் இடத்தில இருந்து திருநீர் அண்ணாமலை வரையில் மான்களின் கூட்டம் உள்ளது. மலையில் மங்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் கீழேவருகிறது,கீழே வந்த மான்களுக்கு பக்தர்கள் தாங்கள் வைத்திருக்கும் தின்பண்டங்களை மான்களுக்கு உணவாக அளிப்பதால்,இதனை உண்ணும் மான்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனால் மான்களுக்கு உணவு அளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மான்களுக்கு ஏற்ற பழ வகைகள் மூலிகை செடிகளை மலையில் நடவேண்டும் என தெரிவித்தார்.