திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவர் கால காலமாக விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ் தனது நிலத்தில் உளுந்து பயிரிடுவதற்கு பெரணமல்லூர் வேளாண்மை துறை அலுவலகத்திற்கு சென்று உளுந்து விதை வாங்கி உள்ளார். வாங்கிய உளுந்துக்கு ரசீதை அப்போது பணியிலிருந்த வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜியிடம் கேட்டுள்ளார். இதற்கு வேளாண்மை துறை உதவி இயக்குனர் சரியான பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது. மேலும் விவசாயி பிரகாஷ் நீங்கள் எனக்கு வாங்கிய உளுந்துக்கு கண்டிப்பாக நீங்கள் ரசீது தந்தால்தான் இங்கு இருந்து செல்லுவேன் என முறையிட்டு ரசீது கட்டுள்ளார். இதற்கு வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் விவசாயி பார்த்து அநாகரீகமாகவும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் விவசாயிக்கும் வேளாண் துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வேளாண்துறை உதவி இயக்குனர் அருகில் இருந்த கட்டையை எடுத்து விவசாயியை தாக்க முயற்சி செய்கிறார். நீ சாதாரண விவசாயி. உன் வேட்டியை அவிழ்த்து விடுவேன் என மிகவும் தரம் தாழ்ந்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம். ஆனால் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு தற்போது இருக்கும் ஆட்சியில் அதிகாரிகள் மரியாதை கொடுப்பதில்லை. விவசாயிகளை கேவலமாகவும் அநாகரிகமாகவும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை அநாகரிகமாக பேசி வந்த வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ் மீது ஏற்கனவே பல புகார்கள் இருந்து வந்துள்ளது. முளைக்காத நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது இதுபோன்ற பல புகார்கள் தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் மீது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இயக்குனர் அரக்குமாரிடம் கேட்டதற்கு முளைப்பு திறன் அற்ற விதை கொடுத்ததற்கும் விவசாயி தவறாக பேசியதற்கும் உயர் அதிகாரிகளிடம் உரிய முறையில் கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார். வேளாண்துறை துணை இயக்குனரிடம் வாங்கிய உளுந்துக்கு உரிய ரசீதை கேட்ட விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க முயன்ற சம்பவம் விவசாயிகள் இடையே பெரும் வேதனையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.