நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது.


4 பிரிவுகளின் கீழ் வழக்கு:


பின் அந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். இதனிடையே குற்றச்சாட்டுக்கு ஆளான ஏஎஸ்பி பல்வீர்சிங் பணி இடை நீக்கம்  செய்யப்பட்டார். இந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சி பி சி ஐ டி போலீசார் குற்ற எண் 03/2023 கீழ் 323, 324, 326, 506/1 என அதே நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்


நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் நான்கு பிரிவின் கீழ்  ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் சிலர் என குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்  சிபிசிஐடி வழக்கு விசாரணை அதிகாரியாக உலகராணி என்பவர் நியமிக்கப்பட்டார். 


தொடர்ந்து நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியும், விசாரணை அதிகாரமான பொன்ரகு பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் முறைப்படி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தார். ஆவணங்களை சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஆய்வாளர் உலக ராணி  நேற்று மதியம் 12 மணிக்கு பெற்றுக் கொண்டு வழக்கு விசாரணையை தொடங்கினார்.




தொடரும் விசாரணை:


அதைத்தொடர்ந்து மாலை 7.30 மணிக்கு மேல் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜகுமார் நவராஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடையவியல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சீனியம்மாள் தலைமையிலான தடையவியல் துறையினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஆய்வாளர் அறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தினர். மேலும் போட்டோ மற்றும் வீடியோ மூலமாகவும் அவர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண