விருதுநகர் மாவட்டம்  NGO காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர்  கண்ணன், இவர் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார், இவருக்கும்  கற்பகம் என்பவருக்கும்  திருமணம் ஆகி 11 வருடங்கள் கடந்து உள்ளது.. இவர்களின் அன்பிற்கு சாட்சியாக  2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது, இப்படி அழகான குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமின்றி அவ்வப்போது ஏற்படும் சண்டையால் துயரமும் ஏற்பட்டு உள்ளது.


சண்டையின் முக்கிய காரணமே சந்தேகம் என்ற நிலையில் இருந்து உள்ளது. மனைவி அழகாக இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது.  இந்த  நிலையில் நிலையில் இன்று காலையும் கண்ணன் மற்றும் கற்பகத்திற்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மனைவி கற்பகத்தை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார்,  இதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதையடுத்து மனைவியை கொலை செய்த கண்ணன் , கத்தியுடன் விருது நகர் ஊரக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்து உள்ளார். 




தகவல் அறிந்த ஊரக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட  கற்பகத்தின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,  வங்கி ஊழியர் கண்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து   விசாரணை நடத்தினர், அதில் தன் மனைவி அழகாக இருந்ததால் அவர் மீது ஏற்பட்ட தீராத சந்தேகத்தால்  மனைவியின் உயிரை காவு வாங்கும் அளவிற்கு கொண்டு சென்றது அம்பலமானது,    குறிப்பாக திருமணமாகி 11 வருடங்கள் கடந்தாலும் மனைவி கற்பகத்தை தனது உடைமையாகவே நினைத்துள்ளார் கண்ணன்.


இந்த அன்பு? தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி தனது மனைவி தன்னை தவிர வேறு எந்த ஒரு ஆணிடமும் பேசக்கூடாது என்ற மனநிலைக்கு கொண்டு சென்று உள்ளது. அதே போல தனது மகன் தன்னை போல் இல்லை என்று கூறியும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக வீட்டிற்கு வரும் பால்காரர், காய்கறிகாரர் என யாரிடம் பேசினாலும்  அவர்களுடன் ஏன் பேசுகிறாய்? நீ  என்ன பேசுன?  அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்?  என கேள்வி மேல் கேள்வி கேட்டு மனைவியை சந்தேகத்தால் சித்திரவதை செய்து வந்துள்ளார். 




அதேபோல ஆண்களிடம் நீ எப்படி பேசலாம்? அவர்கள் உன்னிடம் வந்து எதற்கு பேசுகின்றனர் ? என  சந்தேக வார்த்தையால் மனைவி கற்பகத்தை வதைத்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. கணவனின் தீராத சந்தேகத்தால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழகான ஒரு குடும்பம் சந்தேக தீயால் சீரழிந்து 2 குழந்தைகள் தாயை இழந்து நிற்பது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.