தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா. இவர்களது ஒரே மகள் இன்பென்ட் கேரேன். தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் இன்பேண்ட சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அலாதி பிரியம் கொண்டவர்.


மகளின் இந்த ஆர்வம் குறித்து பேசும் அபர்ணா, "சுமார் மூன்று வயது இருக்கும் போது உடல் நலம் சரியில்லாததால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது மருத்துவரின் டேபிளில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து எனது மகள் கார்ட்டூன் சேனலில் வரும் ஒரு உருவத்தை பென்சிலால் வரையத் துவங்கினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் தனக்கும் இந்தமாதிரி ஒரு ஓவியம் வரைந்து தர முடியுமா எனக் எனக் கேட்டு தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை கொடுத்து அதில் வரையச்சொல்ல சிறுமி அழகாக காட்டும் சேனலில் வரும் டோரா படத்தை வரைந்து கொடுத்தார். ஆச்சரியமடைந்த மருத்துவர் சிறிய வயதில் மிகப்பெரிய திறமை. அவரது திறமையை வெளிக்கொண்டுவரவேண்டும்” என வாழ்த்தினார்.



 


சிறுமியின் தாயார் அபர்ணா அப்பகுதியில் கேபிள் டிவி ஒன்றில் பணிபுரிகிறார். தனது தாயாருடன் வசித்து வரும் இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் இருந்தாலும் கூட தனது மகளின் ஓவிய விருப்பத்திற்கு தடை போட விரும்பாமல் தன்னால் இயன்ற அளவு பென்சில் கலர் பேப்பர்களை வாங்கி கொடுக்க, சிறுமியும் வரையத் தொடங்கியுள்ளார். இன்பேண்ட் அன்று துவங்கிய அவரது ஓவியப் பிரியம் சிறு கார்டூனில் துவங்கிய அவர் மனிதனின் பல்வேறு உணர்ச்சிகள் சோகம், மகிழ்ச்சி அதனை வெளிப்படுத்தும் விதமாக பென்சிலைக் கொண்டு ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறார்.




இது குறித்து மாணவி இன்பென்ட் கேரேன் கூறும்போது, ”எனக்கு ஓவியம் வரைவதில் அலாதி பிரியம் உண்டு எனது ஆர்வத்தை புரிந்து கொண்ட எனது தாயார் அவருடைய ஏழ்மை சூழ்நிலைகளிலும் கூட நான் கேட்ட போதெல்லாம் முகம் சுளிக்காமல் பேப்பரும் பென்சிலும் கலர் பென்சில் பெயிண்டிங் உள்ளிட்டவைகளை வாங்கி என்னை உற்சாகப்படுத்தி வருகிறார். கொரோனா தொற்று காலங்களில் எனது குடும்ப சூழல் வறுமை போன்றவை எனது மனதில் மிகப் பெரிய ஒரு அழுத்தத்தை கொடுத்தது. காசு இல்லாமல் இருக்கும் சூழல் உள்ளிட்டவைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது” என்றார்




வருங்காலத்தில் மன அழுத்தம் தொடர்பான சைக்கார்டிஸ்ட் படிப்பை படித்து என்னைப் போன்றே மன அழுத்தத்தில் உள்ள அவர்களை மீட்டெடுக்கும் வகையில் செயல்பட விருப்பம் உள்ளதாக கூறும் இவர், ”வருங்காலத்தில் ஓவியம் தொடர்பான ஒரு ஆர்ட் கேலரி அமைக்கவேண்டும். அதில் அனைத்து ஓவிய உங்களின் காட்சிப்படுத்த வேண்டும் என்கிறார். என்னைப் போன்றே ஏழ்மையில் உள்ள எத்தனையோ திறமையானவர்கள் வெளிக்கொணரும் வகையில் அந்த கேலரி அமைக்கப்பட வேண்டும் என்பது தனது வாழ்க்கை இலட்சியமாக உள்ளது” என கூறுகிறார்.




வறுமை ஏழ்மை என்பது மிக கொடியது ஏழ்மையான உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு ஆசிரமம் அமைக்க வேண்டும். அதில் எல்லாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். இது தனது ஆசையாக கூறும் இந்தச் சிறுமி லட்சியங்களை சுமந்துகொண்டு எதிர்கால லட்சியத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தனது கண்கள் ஒளிர தெரிவித்தார்.





இதுகுறித்து இவரது தாயார் அபர்ணா கூறுகையில், ”எனது மகள் வரைந்த ஓவியங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கிறார். மழைக்காலங்களில் வீட்டில் மழை நீர் கசிவு ஏற்பட்டதால் அந்த ஓவியங்கள் முற்றிலும் சிதைந்து போனது” என கண் கலங்குகிறார். தனது தாயார் மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதாகக் கூறும் அபர்ணா தனது மகளின் நோக்கம் நிறைவேற என்னால் இயன்ற அளவு முயற்சி செய்து வருகிறேன் என்கிறார்.