தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2023- 24ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.


இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.  அதன்படி,   நெல்லை  மாவட்டத்தில் 96.44% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய  1913 பேரில் 18,509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 10,900 பேர் தேர்வு எழுதியதில் 10625 பேரும், மாணவர்கள் 8293 பேர் தேர்வு எழுதியதில் 7884 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லையில் அரசு பள்ளி மாணவிகள் 95.63 சதவிகிதமும், மாணவர்கள் 90.45 சதவிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவிகள் படிக்கும் பள்ளியில் 97.97 சதவிகிதமும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் 95.35 சதவீதம் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் 96.04 சதவிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நெல்லையில் மொத்தம் 96.61 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்த நிலையில் இந்த ஆண்டு அது 96.44 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்,


அதேபோல தென்காசி மாவட்டத்தில் 96.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய  15927 பேரில், 6658 ஆண் மாணவர்களும், 8643 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 94.25 சதவீதம் மாணவர்களும், 97.52 சதவீத மாணவிகளும் என மொத்தம் 96.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 95.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 96.07% ஆக உயர்ந்துள்ளது


அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.72% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 21560 பேரில், 9429 மாணவர்களும், 11208 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 92.91 சதவீதம் மாணவர்களும், 98.22 சதவீத மாணவிகளும் என மொத்தம் 95.72 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 97.05 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு அது 95.72 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மொத்தமாக திருநெல்வேலி 96.44 சதவீதம், தூத்துக்குடி 96.39 சதவீதம், தென்காசி 96.07 சதவீதம் கன்னியாகுமரி 95.72 சதவீதம் என  தென் தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தில் நெல்லை மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.