ஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் ஓங்கி உயரமாக வளரும் தன்மைகொண்ட செழிப்பான மரமான மருத மரம் சிவந்த நிற மலர்களையும், வளவளப்பான பட்டைகளையும் கொண்டது, மருத மரத்தின் செழுமையான நிழலில் இளைப்பாற, உடல் அசதி மற்றும் பிணிகள் அகன்று, உடலில் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்த மருத மரமே, மனிதர் உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருத்துவ மரமாக, உடல் வியாதிகளைப்போக்கும் அருமருந்தாகப் பயன் தருகிறது.




மருத மரத்தின் இலைகள்,துவர்ப்பு தன்மைமிக்க மருதமரத்தின் பட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துமிக்க டான்னிக், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள காரணத்தால், மருதம் பட்டைகளே, அதிக அளவில் மூலிகை மருந்தாக, பயன்படுகின்றன.




மருதம் பட்டைகள் வியாதி எதிர்ப்பு சக்தி அதிகம் நிரம்பியவை, இதயம் தொடர்பான வியாதிகளுக்கு சிறந்த தீர்வாகிறது, மருதம் பட்டைகள். நன்கு பொடியாக்கிய மருதம் பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, குடிநீராக பருகிவர, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, இதய வியாதிகளை போக்குகிறது. இன்று வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயதினரையும் பாதித்து, சமயங்களில் உயிரையும் பறித்துவிடும் கொடிய வியாதியாக, மாரடைப்பு காணப்படுகிறது.இவ்வளவும் என்னால் இயன்றளவு உங்களுக்கு செய்து இருப்பேன் என நம்புகிறேன்.




முன்னெல்லாம் சுவாமி நெல்லையப்பர் சாலையின் இருபுறமும் மருத மரங்கள் நிறைந்து இருப்போம், ஒவ்வொரு சித்திரை திருவிழாவில் சுவாமி தீர்த்தவாரி செல்லும் போது பொதுமக்கள் மரத்தின் நிழலிலே பல கிலோ மீட்டர் குளிர்ச்சியுடன் நடந்து செல்ல ஏதுவாக இருந்தேன்.. அப்போது நெல்லையப்பர் சாலையின் இருபுறமும் இருக்கும் ஏராளமான மருத மரங்களின் நிழலிலே பல கிலோமீட்டர் குளிர்ச்சியுடன் நடந்து செல்ல ஏதுவா இருந்தோம்,  பக்தர்களுக்கு இயற்கையோடு , நிழலும் தரக்கூடிய வகையில் இந்த மருத மரங்கள் காட்சி தந்தோம். இந்த வழியா நீங்க வரும் போது இருபுறமும் நின்று நிழலாய், குளிர்ச்சியாய் உங்களை அழைத்து சென்றோம்.




முதலில் விரிவாக ஆரம்பித்த சாலையின் போது இருபுறமும் இருந்த நாங்கள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டோம். நூறாக நின்றோம், பத்தானோம். தற்போது, இங்கு ஒரே ஒரு மருதமரமாக நான் மட்டுமே இருக்கிறேன், மின் பராமரிப்பு என அவ்வப்போது என்னை சிறிய அளவில் வெட்டினார்கள், மீண்டும் தளிர்த்தேன்.ஆனால் இப்போ சாலை விரிவாக்கப்பணி, மின்பாதைக்கு தடங்கலாக இருப்பதாக கூறி என் சிறகுகளை மீண்டும் வெட்டிட்டாங்க... மீண்டும் தளிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு... நகரமயமாக்கலுக்கு சாலை விரிவாக்கம் அவசியம் தான், எங்களையும் வாழவிடுங்க என்கிறோம்.