நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளையும் (03.09.24) நாளை மறுநாளும் (04.09.24 மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
- விக்கிரமசிங்கபுரம் & ஆழ்வார்குறிச்சி பகுதிகள்:
காரையார், சேர்வலார், பாபநாசம் வீ.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிலைபட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்க்குறிச்சி, கறுத்தபிள்ளையூர், A.P நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பங்குளம், செல்லபிள்ளையர்குளம் ஆகிய பகுதிகளில் செப் 3 ஆம் தேதி காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட பொறியாளர் வளன் அரசு தனது செய்திக்குறிப்பு:
- கூடங்குளம் பகுதிகள்:
கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார் புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய பகுதிகளில் செப் 3 ஆம் தேதி காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது.
- பணகுடி பகுதிகள்:
பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய பகுதிகளில் செப் 3 ஆம் தேதி காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது
- திசையன்விளை பகுதிகள்:
திசையன்விளை, மகாதேவன் குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான் மொழி ஆகிய பகுதிகளில் செப் 3 ஆம் தேதி காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது.
இதே போல செப் 4ஆம் தேதி மானூர் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- மானூர் பகுதிகள்:
மானூர்,மாவடி, தெற்கு பட்டி,களக்குடி,எட்டாங்குளம்,கானார்பட்டி, பிள்ளையார் குளம்,குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளிலும் செப் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும் மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.