புலித்தேவன் 309 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் கூறும் பொழுது, விடுதலை போராட்டத்திற்கு முதல் உரிமைக் குரல் எழுப்பிய தியாகச் செம்மல் பூலித்தேவனின் 309 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மகிழ்ச்சியோடு மரியாதை செலுத்தினோம். அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்டெடுக்கின்ற குழுவாக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளாக நாங்கள் கலந்து கொண்டு எங்களுடைய வீர வணக்கத்தை செலுத்தியதாக தெரிவித்தார்.
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒருங்கிணைந்து அம்மாவின் ஆட்சியை நிறுவுவோம் என்றார். பூலித்தேவனின் முழு உருவ வெண்கலச்சிலையை சென்னை மாநகரில் அமைக்க கோரிக்கை வரப்பெற்றுள்ளது. அதனை தற்போது ஆளும் அரசிடம் கூறி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பாஜக அதிமுக கருத்து மோதல் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே வருகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கருத்து மோதலை நிகழ்த்துகிறார்களோ அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. ஏற்கனவே நடிகர் விஜய் அரசியல் ரீதியாக இயக்கத்தை ஆரம்பிக்க போகிறார் என்றதும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறோம். என்றார். மேலும் நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினை சீர்கெட்டு கொண்டிருக்கிறது. போதை பொருள் எங்கும் தாராளமாக இங்கு விற்பனை தலமாக உள்ளது.
அதே போல கனிம வளமும் நமது தமிழ்நாட்டில் இருந்து எடுக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சூழல் இருக்கிறது. தொடர்ந்து இந்த சூழல் நிலவுவேமானால் அதிமுகவின் தொண்டர்கள் பாதுகாப்புக்குழு மிகப்பெரிய நாடுதழுவிய போராட்டத்தை நடத்தும் என்றார். தொடர்ந்து விளையாட்டில் பந்தயங்கள் நடப்பதே தவறு என்று சொல்வது நல்லதல்ல என்றும் தெரிவித்தார்