திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், என்ன நடந்தது? எதனால் நடந்தது? நீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். 


நீதிமன்றத்திற்கு அருகே கொலை:


இன்று காலைசுமார் 8 மணியளவில், 24 வயதுடையாக கூறப்படும் மாயாண்டி என்ற இளைஞர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்திருக்கிறார். அப்போது, காரில் இருந்து 4 பேர் கொண்ட கும்பலானது, மாயாண்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. 


இதையடுத்து, காரிலிருந்து இறங்கி மாயாண்டியை துரத்திச் சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், அவரது ஒரு கை மற்றும் இரு கால்களும் துண்டாகின. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஒருவரை கைது செய்தனர்.




மீதமுள்ள 3 பேர் காரிலிருந்து தப்பித்துச் சென்றனர்.  திடீரென மாயாண்டியை திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் , இந்த கொலை சம்பவமானது நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது தப்பித்துச் சென்ற மூவரும் காவல்துறையிடம் சரணடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.


6 பேர் கைது?


இந்த கொலை சம்பவத்தில் மனோராஜ் (27), தங்கமகேஷ் (19), சிவா (19), சுந்தரலிங்கம் (19)  ஆகிய 6 நபர்கள் ஈடுபட்டதாகவும் , 4 பேரும்  கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்கள் வந்த காரில் மொத்தம் 6 பேர் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  மாலை நிலவரப்படி 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 


எதற்காக கொலை?


இந்த கொலை சம்பவமானது, முன்பகை என்றும் சாதிய மோதல் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ராஜாமணி என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை வழக்கில், இன்று கொலை செய்யப்பட்ட மாயாண்டி என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் இன்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டம் தீட்டி ராஜாமணி உறவினர்கள் கொலைசெய்துள்ளனர். 


நீதிமன்றம் சரமாரி கேள்வி:


இந்நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகே , ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு, தாமாக விசாரணைக்கு எடுத்த திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்,  நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தர, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் , காவல்துறைதரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார், “ நீதிமன்ற வளாகத்தில் , காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தபோது, ஏன் கொலையை தடுக்கவில்லை?; கொலையை தடுப்பதற்கு பதிலாக , தேடி வருவதாக கூறுவதா என கேள்வி எழுப்பினார்.


அப்போது, காவல்துறை சார்பில், கொலை நடந்தபோது ஒருவர் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில்சட்டம் ஒழுங்கு குறித்து, எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு ஓசூரில் வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் கொலைச் சம்பவம், தஞ்சையில் பள்ளிக் கூடத்திற்குள் சென்று ஆசிரியர் படுகொலை நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 


இபிஎஸ் கேள்வி:




 


இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், ●சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு


●சிவகங்கையில் தாயின்கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை


●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில்5 பேருக்கு கத்திக்குத்து.


தனிப்பட்ட கொலைகள்"என்று இன்னும் எத்தனை நாட்கள்தான்  திமுக அரசுசட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது? நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.