நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு மரம் வளர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகமும்  தன்னார்வ அமைப்புகளும் இணைந்து  திருக்குறுங்குடி அருகே உள்ள  தனியார்  தோட்டப் பண்ணை பகுதியில்  டிவிஎஸ் சமூக அமைப்பின் மூலம்  தயார் செய்யப்பட்ட 40 ஆயிரம் விதைப்பந்துகளை தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு விதை பந்து தூவும் பணியை  தொடங்கி வைத்தார்.


நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் மழையை பொறுத்த வரை 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது



கூட்டுறவுத்துறையில் யார் தவறு செய்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு


தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் இணைந்து ஆட்சியர்  விதைபந்துகளை வீசினார், மேலும் மாணவர்களிடம் நீர்நிலை பாதுகாப்பு, இயற்கை வளங்களை  பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் உரையாடினார். பின்பு  ஏர்வாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய புத்தகங்கள் ஒரு அறையில் குவித்து வைக்கப்பட்டு கரையான் அரித்து கிடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அங்கு  சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  ஆட்சியர் விஷ்ணு  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் என்ற  அமைப்பை உருவாக்கி நெல்லை மாவட்ட நீர்நிலைகளின் அருகில் மரம் நடுதல்,  உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஸ்மார்ட் சிட்டி எனக்கூறி வொர்ஸ்ட் சிட்டி ஆக சென்னையை மாற்றி வைத்துள்ளனர்- MRK பன்னீர்செல்வம்



கயிறு மூலம் ஆறை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் - ஊராட்சி தலைவரின் தற்காலிக ஏற்பாடு


நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக சுற்றுசூழல் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் மழையை பொறுத்த வரை 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பணகுடி அனுமன் நதியோடை மூலமாக 45 குளங்கள் நிரம்பியுள்ளன. மழை பாதிப்பை பொறுத்த வரையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 10 வீடுகள் மட்டும் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக கூறினார்.


கோயில்களில் வெளிப்படையான தணிக்கை கோரி ஈஷா தொடந்த வழக்கு - அறநிலையத்துறை பதில்தர உத்தரவு