கன்னியாகுமரியில் இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி சூரிய அஸ்தமனம் சந்திரன் உதயம் ஆகிய காட்சிகள் ஒரே நேரத்தில் நடப்பதை காண இந்த பிற்பகல் முதல் ஏராளமானோர் கன்னியாகுமரி சென்று கொண்டிருப்பதால் சுசீந்திரம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது இந்நிலையில் இன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து 10 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் வந்த வேன் ஒன்று சுசீந்திரம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் ஒரு சைக்கிளில் வந்த மூன்று பேர் ஒவ்வொரு வாகனத்தையும் முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த காரில் மோதி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் சம்பவ இடம் வந்து உடனடியாக விசாரணை நடத்தினர்.போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடி சேர்ந்த சுரேஷ்பாபு என்பவரது மகன் முத்துசாமி என்றும் மற்றவர்கள் அவரது நண்பர்கள் என தெரியவந்தது. உயிரிழந்தவர்களின் உடல்கள். ஆம்புலன்சில் ஏற்றி நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
சித்ரா பவுர்ணமி அன்று சூரியன் அஸ்த்தமிக்கும் அதே வேளையில் சந்திரன் உதிகும் அரிய நிகழ்வு
ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று கடலில் சூரியன் அஸ்தமிக்கும் அதேநேரத்தில் சந்திரன் உதிக்கும் அரிய நிகழ்வு உலகில் இரண்டு இடங்களை மட்டுமே பார்க்க முடியும் தென்னாப்பிரிக்காவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் இரண்டாவது இடமான சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தான் காணமுடியும் இந்த அரிய நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்ல கேரளா மற்றும் மகாராஷ்டிரா டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று மாலை கன்னியாகுமரி கடல் பகுதிகளில் குவிந்தனர் குடும்பங்களுடன் வருகை தந்தவர்கள் மழை மேகங்கள் காரணமாக சூரியன் அஸ்தமனம் காட்சிகளை முழுமையாக காண முடியாவிட்டாலும் கடலில் இருந்து வானில் உதித்து வரும் சந்திரன் உதயமாகும் அபூர்வக் காட்சியைக் கண்டு உற்சாகமடைந்தனர் .
நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2 கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது இதனை தடுக்க போலீசார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் நாகர்கோவில் ரயில் நிலைய பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் 5 பேர் வந்தனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் 2 கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கோவில் விளையை சேர்ந்த அபீஷ் (22) அருண் (23) புத்தளம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (22) ஆரோக்கியராஜ் (20) இருளப்பபுரத்தை சேர்ந்த விஜயன் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.