திருச்செந்தூர் அருகில் உள்ள மேல திருச்செந்தூர் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறி தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள மேல திருச்செந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு  கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




இந்தநிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 8-வது வார்டு உறுப்பினர் சுதா தனது வார்டு பகுதியில்  ஊராட்சி சார்பில் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை  எனக்கூறி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை ஊராட்சி மன்ற தலைவர் இடம் வழங்கினார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டங்களுக்கு வழங்கப்படும் பணப்படியினையும் ஊராட்சி நிர்வாகம் தரவில்லை என குற்றம் சாட்டிய அவர், இதுவரை தங்கள் பகுதியில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும் தொடர்ந்து மேலத் திருச்செந்தூர் ஊராட்சி நிர்வாகம் தங்கள் பகுதியை புறக்கணித்து வருவதாகவும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.




மேலும் இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உரிய விசாரணை நடத்தி இதுபோல செயல்பாடமல் இருக்கும் ஊராட்சி நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளர். குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தனது பதவியை  ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


ALSO READ | Judo Rathnam Passed Away: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! காலமானார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்..!