முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இறந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கினார். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் 25-05-23 அன்று 2 மாதத்தில் இந்த வழக்கை முடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் 21-06-23- அன்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. அதனை தொடர்ந்து வழக்கு 17-07-23 அன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மாவட்ட நீதிமன்ற விசாரணைக்காக 52 சாட்சிகள் இந்த கொலை வழக்கு தொடர்பாக அடையாளம் காணப்பட்டு மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள் இரும்பு ராடு உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம் தலைமையில் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு விசாரணை நடந்த 21 ஆம் தேதி துவங்கி 31 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு விசாரணை முடிவுற்றது.
மிகவும் விரைவாக இந்த வழக்கில் 25 நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு இன்று மாவட்ட நீதிபதி செல்வம் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளித்தார் இதில் அரசு அலுவலரை பணி செய்யும் இடத்திலேயே கொடூரமாக கொலை செய்தது, அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததிற்கு, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் மணல் கொள்ளையர்கள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதில் அரசு அலுவலரை பணி செய்யும் இடத்திலேயே கொடூரமாக கொலை செய்த மணல் கொள்ளையர்கள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 3000 ரூபாய்அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார் அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக ஐந்து ஆண்டும் கொலை மிரட்டலுக்காக ஓராண்டும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.