தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டையாபுரம், கடலையூர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, திருத்தங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவிரிபட்டினம் ஆகிய இடங்களில் 400க்கும் மேற்பட்ட இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 90% பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அடக்கச் செலவு அதிகரித்து விற்பனை விலை கிடைக்காத நிலையில் கடந்த ஆண்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சுமார் 80 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியில் விலையை 14 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ 1 லிருந்து ரூ. இரண்டாக அதிகரித்தனர். ஆனால் மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் தீப்பெட்டி இப்படிக்கு சவாலாக உள்ளது,ஏற்கனவே வாரத்தில் நான்கு நாட்கள் தான் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. மின்கட்டண உயர்வு,டீசல் உயர்வு, லாரி வாடகை அதிகரிப்பு,தொழிலாளர்கள் சம்பள உயர்வு என அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்சினையாக வருவதால் உற்பத்தியாளர்கள் தீப்பெட்டி தொழிலை சீராக கொண்டு செல்ல இயலாமல் திக்கி திணறி வருகின்றனர்.
இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறும்போது, தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் அளவு அட்டை, குச்சி பேப்பர், மெழுகு, குளோரைட், சிகப்பு பாஸ்பரஸ் போன்றவை மாதம் தோறும் விலை உயர்ந்து வருகிறது அதனால் தீப்பெட்டியின் அடக்கச் செலவுக்கு விற்பனை வழி கிடைக்கவில்லை இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய ஒரு சூழல் உள்ளது மேலும் கடந்த ஆண்டு முதல் வட மாநிலங்களில் லைட்டர்களை ரூ.7 முதல் 12 வரை விற்பனை செய்து வருகின்றனர் ஒரு லைட்டர் 20 தீப்பெட்டி விற்பனையை பாதிக்கும்,இதுகுறித்து தமிழக முதல்வர் கோவில்பட்டி வந்த போது அவரது கவனத்திற்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கொண்டு சென்றோம்.இதனைத் தொடர்ந்து உடனடியாக வெளிநாடு இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடுத்து நிறுத்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதினார் ஆனால் இன்று வரை மத்திய அரசு இதுக்கு செவி சாய்க்காத ஒரு சூழல் உள்ளது.
தற்போது தீபாவளி சீசன் துவங்கி விட்டதால் வட மாநிலங்களில் பட்டாசு வியாபாரிகள் கொள்முதலில் ஆர்வம் கட்டி வருகின்றனர் இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பழைய பாக்கித் தொகையை அவர்கள் அனுப்பவில்லை புதிதாக ஆர்டர்களும் வழங்கவில்லை இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர் வெள்ளிக்குச்சி தயாரித்தல் பிரிண்டிங் மற்றும் ஸ்க்ரீன் ஸ்கோரிங் உள்ளிட்ட தீப்பெட்டி சார்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தீப்பெட்டி உரிமையாளர்கள் வங்கிகளில் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் கேட்டு உள்ளனர் எனவே தமிழக அரசு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு சிட்கோ மூலம் மானிய விலையில் மூலப்பொருட்களை விற்பனை செய்தால் ஓரளவு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் அதே நேரத்தில் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்கிறார்.