தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து, பாசி மக்கா, வெள்ளைச் சோளம், வெங்காயம் மிளகாய், கொத்தமல்லி, சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர். பருவத்திற்கு மழை பெய்யாமல் பிந்தைய மழையால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் இரண்டு மூன்று முறை அழித்து விதைத்தனர். அடுத்தடுத்து விதைப்பு செய்து கடும் நஸ்டம் ஏற்பட்டது. தென்தமிழகம் கோவில்பட்டி, விளாத்திகுளம்திருச்சுழி, பெருநாழி, சாயல்குடி, மறவர் பெருங்குடி, போன்ற பகுதிகளில் வெங்காயம், மிளகாய் அதிகம் பயிரிடப்படுகிறது. சம்பா மிளகாய், குண்டு மிளகாய் ஆகிய இருவகைகளில் மானாவாரி கரிசல் நிலத்தில் குண்டு மிளகாய் அதிகம் பயிரிடப்படுகிறது.




கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குண்டு மிளகாய் மகசூல் எதிர்பார்த்த பலனை தரவில்லை. மிளகாய் விதைப்பு செய்து பூ பூக்கும்வரை ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்யப்படுவதால் முழுக்க இதனை நம்பியே பல ஆயிரம் விவசாய குடும்பங்கள் உள்ளனர். கடந்தாண்டும் இந்தாண்டும் குண்டு வத்தல் விலை கட்டுபடியாக கூடியதாக இருந்தாலும் மிளகாய் செடிகள் போதிய ஈரப்பதமின்றி காய்ந்துவிட்டன. ஏக்கருக்கு 3 முதல் 5 குவிண்டால் வரை மகசூல் கிடைத்த நிலைமாறி கிலோ அளவிலேயே விளைச்சல் உள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, பயிர்கள் ஓரளவு வளர்ந்த நிலையில் அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழையால் எட்டயபுரம், புதூர், விளாத்திகுளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல மழைநீர் தேங்கியது. இருக்கன்குடி அணைக்கட்டின் கால்வாய்களை சீரமைத்தால் மட்டுமே மழைநீர் தேங்காமல் இருக்கும்.




இந்த ஆண்டு ராபி பருவத்தின் தொடக்கத்தில் விதைத்தும், மழை பெய்யாததால் இரண்டாம் முறை உழுது விதைத்தோம். ஆனால், பயிர்கள் வளர்ந்தும் கருகி போய்விட்டன. நம்பிக்கையை தளரவிடாமல் மூன்றாம் முறையாவும் விதைச்சோம். மழை கஞ்சி, ஒப்பாரி, கொடும்பாவி எரித்தல் என மழை பெய்வதற்கான வழிபாடுகளைச் செய்தோம். மழையும் பெய்தது. பருவத்திற்கு மழை பெய்யாமல் பிந்தைய மழையால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. 




ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்யப்படுவதால் முழுக்க இதனை நம்பியே பல ஆயிரம் விவசாய குடும்பங்கள் உள்ளனர். கடந்தாண்டும் இந்தாண்டும் குண்டு வத்தல் விலை கட்டுபடியாக கூடியதாக இருந்தாலும் மிளகாய் செடிகள் போதிய ஈரப்பதமின்றி காய்ந்துவிட்டன. ஏக்கருக்கு 3 முதல் 5 குவிண்டால் வரை மகசூல் கிடைத்த நிலைமாறி கிலோ அளவிலேயே விளைச்சல் உள்ளது. இருப்பினும் தற்போது சந்தையில் குவிண்டால் 40 ஆயிரம் விலை போகிறது. விலை இருந்தும் விளைச்சல் இல்லையே 3 ஆண்டுகளாக பட்ட கடனை இந்தாண்டாவது அடைத்துவிடலாம் என எண்ணிய விவசாயிகளுக்கு இயற்கை கைகொடுக்கவில்லை.




தோட்டக்கலை பயிர்களான கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய்க்கு கடந்த 2020-2021ம் ஆண்டு பயிர் காப்பீடு வெங்காயம், கொத்தமல்லிக்கு மட்டும் கிடைத்துள்ளது. மிளகாய்க்கு இன்னும் பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. தவிர இதர பயிர்களுக்கும் பயிர்காப்பீடு வழங்கப்படாததால் விவசாயிகள் மிகவும் மனம் உடைந்துபோயுள்ளனர். அரசு தீவிர கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு 2020-2021 பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.