அடிப்படை வசதி இல்லாத தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-  பொதுமக்கள் அவதி-கழிப்பறை இல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவினை அளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் கூட்டம், மீனவர் குறை தீர்ப்பு கூட்டம் உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது.




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு அளிக்க வரும்போது காவல்துறையின் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை  மனுவுடன் மனு அளிக்க வருபவர்களில் ஒரு சிலர் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு அங்கேயே இருக்க வைக்கப்படுகின்றனர்.


இவ்வாறு மனு அளிக்க கிராமத்தினர் கூட பொதுமக்கள் வரும்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தங்கள் அவசரகால உபாதைகளை கூட கழிக்க முடியாமல் அப்பகுதியில் உள்ள முற்புதர்கள் பகுதியிலேயே தங்களது உபாதைகளை கழிக்கும் சூழ்நிலை உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கழிப்பறைகள் இருந்தாலும் அங்கே அனைவரையும் அனுமதிக்காத நிலையில் பொதுமக்கள் கழிப்பிடமாக இந்த முட்காடுகளையே உபயோகித்து வருகின்றனர்.




அதேபோன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்று தளங்களிலும் கழிப்பறை உள்ளது. முதல் தளத்தில் உள்ள கழிப்பறை தூய்மைப்படுத்தாத நிலை உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் அறை இருக்கும் முதல் தளத்தில் கழிவறைகள் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கீழ் தளத்தை கண்டு கொள்வதில்லை என்கின்றனர்.




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்த பெண்களிடம் இது குறித்து கேட்டபோது,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பல்வேறு கிராமங்களை சேர்ந்த நாங்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் மனு அளிக்க அனுப்பி வைக்கின்றனர்.நாங்கள் ஆட்சியர் அலுவலக வளாக பகுதிகளில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்தப் பகுதியில்  கழிவறை இல்லாததால் இயற்கை உபாதைகளுக்காக நாங்கள் இப்பகுதியில் உள்ள முள்காடுகளையே உபயோகித்து வருவதாக தெரிவிக்கும் இவர்கள் இப்பகுதியில் குடிக்க கூட தண்ணீர் இல்லை என கூறுகின்றனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதிகளில் கழிப்பறையில் கட்டி தர வேண்டும் என்கின்றனர்.