தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் தனியார் பள்ளி.  இப்பள்ளியில் அதே ஊரை சேர்ந்த சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் ராஜதுரைலிங்கம்(42) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வகுப்பறையில் ஒரு மாணவனை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி, கிண்டல் செய்ததோடு அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இடைவேளையின் போது அந்த மாணவனை தனியாக அழைத்து ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து அவனது பெற்றோர் தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். அப்போது  பள்ளியில் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். 


அந்த ஆசிரியர் மற்ற  மாணவர்கள் முன்னிலையில் பேசிய நிலையில் தனது மகன் மனமுடைந்து காணப்படும் நிலையில் இது குறித்து அவனது பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் ஆசிரியர் ராஜதுரைலிங்கம் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் மாணவனிடம் அநாகரீகமாக  நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரியர் ராஜதுரைலிங்கத்தின் மீது போக்சோ மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து ஆசிரியரை கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண