தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காந்தி தெருவை சேர்ந்த அசல் முகைதீன். இவர் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் தென்காசி சைபர் கிரகம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில், பொட்டல் புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்பள்ளிவாசலுக்கு தமிழக மற்றும் கேரளாவில் இருந்து அனைத்து மத மக்களும் வந்து வழிபாடு செய்வது வழக்கம். இப்பள்ளி வாசலை பொட்டல் புதூரை சேர்ந்த செய்யது பீர்சா என்பவர் குடும்பம் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வருகிறது. அவர் பொட்டால் புதூர் பள்ளிவாசல் குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவி வருவதாகவும், அது குறித்து மே மூன்றாம் தேதி சைபர் கிரைம் வலைதளத்திலும், மே நான்காம் தேதி தென்காசி சைபர் கிரகம் காவல் நிலையத்திலும் நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுத்திருந்தார்.
நான் அசன் முகைதீன்18 என்ற டிவிட்டர் ஐடியை பயன்படுத்தி வருகிறேன். மே ஐந்தாம் தேதி மாலை எனது ட்விட்டர் ஐடியை பார்க்கும்போது நான் வேலை செய்யும் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலை வீடியோ எடுத்து ஸ்ரீனிவாச சுப்பிரமணியன் என்ற ட்விட்டர் ஐடியை வைத்திருக்கும் நபர் எந்த தெய்வம் குடியிருந்த கோவில் இடம் தென்காசி என பதிவு செய்து பெரியோனே என் ரகுமானே பெரியவனே ரஹீம் என்ற வாசகம் அடங்கிய ஆடியோ உடன் வீடியோ பதிவு செய்து மே இரண்டாம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மே ஐந்தாம் தேதி தென்காசி சைபர் கிரைம் வலைதளத்தில் மேற்படி அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது தென்காசி சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது சென்னையைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரரான சீனிவாச சுப்பிரமணியன் இந்த பதிவை பதிவு செய்துள்ளதாக தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் சென்னை சென்று அவரை கைது செய்து தென்காசிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் மேற்படி புகார் கொடுத்து விசாரணை செய்து தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் செய்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சீனிவாச சுப்ரமணியன் தரப்பில் ஆஜரான ஏழு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி இது குறித்து விசாரணை செய்து மேற்படி சமூக வலைதளத்தில் பதிவு செய்த சீனிவாச சுப்பிரமணியனை ஒரு நாள் மட்டும் தென்காசி சப் ஜெயிலில் வைத்திருக்குமாறும் மறுநாள் ஜாமீனில் செல்ல அனுமதித்தும் உத்தரவிட்டார். பள்ளிவாசல் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தமைக்காக ஒருவர் கைது செய்யப்பட்டு தென்காசியில் விசாரணை நடந்தபோது அப்பகுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.