நெல்லை பாளையங்கோட்டை அடுத்த விஎம்.சத்திரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது தாய் தந்தை இல்லாததால் மேலப்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார், பாட்டியின் அரவணைப்பில் அங்குள்ள தனியார் பள்ளியில் அச்சிறுமி பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார், இந்த நிலையில் கேடிசி நகரை சேர்ந்த பொன் கணேஷ் (20) என்ற வாலிபருடன் சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது, அப்போது பொன் கணேஷ் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார், மேலும் தன்னுடன் நெருங்கி பழகும் விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது எனவும் சிறுமியை மிரட்டியதாகவும் தெரிகிறது.
அதோடு சிறுமியின் பள்ளியில் பாட்டு ஆசிரியராக அருள்ராஜ் ஜோசப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரும் இச்சிறுமியிடம் நன்கு பழகி உள்ளார். அப்போது அச்சிறுமியை தொடர்புகொண்டு அவருக்கு பைக் ஓட்ட கற்று தருவதாகவும் கூறியுள்ளார், தனது ஆசிரியர் என்பதால் அவரை நம்பி சிறுமி அருள்ராஜ் ஜோசப் உடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற உள்ளார். அப்போது நெல்லை ரெட்டையார்பட்டி இரட்டை மலை அருகே சென்ற ஆசிரியர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை சிறுமி பொன் கணேஷிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பொன் கணேஷ் ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அப்போது பொன் கணேஷ் சிறுமியின் விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க ஆசிரியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது, இதற்கிடையில் பொன் கணேஷ் சிறுமியின் இல்லத்துக்கு அடிக்கடி வருவதை கவனித்த சிறுமியின் பாட்டி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார், அதனடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி உள்ளனர், விசாரணையில் பொன் கணேஷ் மற்றும் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் ஆகிய இருவரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை தெரிவித்து உள்ளார். இதையடுத்து போலீசார் இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர், பள்ளிக்கு படிக்க செல்லும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் இது போன்று தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் கண்டிக்கத்தக்கது, வேலியே பயிரை மேய்வது போல நெல்லையில் ஆசிரியர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்