தமிழகம் முழுவதும் மாநிலத்தலைவர் தலைமையில் கூடிய மையக்குழு சார்பில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவின்படி இன்று நெல்லையில் நடைபெறும் கூட்டத்தில் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, நேற்றைய பாராளுமன்றத்தில் ஒரு ஆரோக்கிய விவாதம் நடைபெறுவதற்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்துக்களையும் குறை  சொல்லும் அளவிற்கு பேசி இருக்கிறார். இந்துக்கள்  என்றாலே வன்முறையாளர்கள் என்று பேசியிருக்கிறார். பாராளுமன்ற விதிகளை மீறி இருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தை பற்றி பேச தகுதியே இல்லாத ஒரு கட்சி என்றால் அது காங்கிரஸ். ஏனென்றால் அவசர நிலை பிரகடனத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நானும் ஒருவன். நேரடியாகவே பாதிக்கப்பட்டோம். அவர்கள் இந்த நாட்டை ஆளும் பொழுது எல்லா குற்றங்களையும் செய்துவிட்டு எந்த விதத்திலும் மக்களுக்கு உதவி செய்யாமல் இன்று பிரதமரை குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்துக்களை குறை சொல்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


இங்கிருந்து சென்ற 40 பேர் வாயே திறக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் சொன்னோம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர்களால் எதையுமே செய்ய முடியாது.  பாஜக  கூட்டணியில் இருப்பவர்களை தேர்ந்தெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும் என எவ்வளவோ சொல்லி பார்த்தோம். அதனால் 40 பேரால் தமிழகத்திற்கும் புதுவைக்கு எந்த வித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. அதேபோல தமிழக அரசு எதிர்கட்சியாக இருக்கும் பொழுது கருப்புக்கொடி  அணிந்து, கருப்பு உடை அணிந்து பூரண மது விலக்கு எனவும், கனிமொழி மதுவிலக்கு தான் எனது கொள்கை என பேசிக்கொண்டிருந்தார். ஆனால் இன்று பத்திரிக்கையாளர்களை கண்டால் ஓடி ஒளிகிறார். கள்ளக்குறிச்சிக்கு போகாமல் முதல்வர் தவிர்க்கிறார், துறை சார்ந்த அமைச்சர் தவிர்க்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் சிபிஐ விசாரணைக்கு பயப்படவேண்டும். திமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள். அப்படியென்றால் குற்றம் இழைத்தவர்கள் பலர் திமுகவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் இளவரசர் உதய நிதியை அனுப்பி விடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இது ஒன்றும் குடும்ப விழா அல்ல, இது நாட்டின் பிரச்சினை. திருச்செந்தூர் கோவிலில் கட்டுமான பணிகள் தாமதமாகிறது. கூட்டம் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு எந்த உதவிகளும் இல்லை. இந்து மத ஆலயங்களில் நடக்கும் பிரச்சினைகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை, அங்கு வரும் பக்தர்கள் நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றனர்.
 


காங்கிரஸ் ஜெயக்குமார் மரணத்தில் இன்னும் நியாயம் கிடைக்கவில்லை, ஆனால் அதை காங்கிரஸ்காரர்களே  கேட்க மறுக்கின்றனர். திமுக  அரசை எதிர்த்து பேச பயப்படுகிறார்கள், சிபிசிஐடி விசாரணை எந்த பலனும் தராது என்பதற்கு ஜெயக்குமார் கதையே ஒரு சாட்சி. ஆகவே சிபிஐ விசாரணை செய்து குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். காங்கிரசும், அரசும் அதற்கு ஒரு கோரிக்கை கூட வைக்காமல் இருப்பது ஆச்சரியமிக்க ஆச்சரியம்.. அவர்களுக்கு ஓட்டு ஒன்று தான் குறிக்கோள். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உள்ள பிரச்சினையில் அங்குள்ள தொழிலாளர்களுக்கு ஒரு ஆதரவை இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும். தமிழக தேயிலை நிறுவனத்தோடு இணைக்கப்பட்டால் மகிழ்ச்சி.


500 குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்பது எனது கோரிக்கை. ராகுல் காந்தி கள்ளக்குறிச்சி விசயத்தில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்றால் இவர்கள் குறிப்பிடுவது கட்சி சார்ந்தே தவிர மக்கள் சார்ந்து அல்ல. தமிழக அரசு கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு 10 லட்சம் பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்தவர்களுக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள். இவர்கள் துக்க தொகையை ஊக்கத்தொகையாக கொடுக்கின்றனர். இவர்கள் மதுவிலக்கு கொள்கையை எப்படி கையாளப்போகிறார்கள். எப்படி எத்தனை கடைகளை மூடப்போகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை படிப்படியாக ஒழிப்போம் என்று தற்போது டெட்ரா பேக் போடலாமா? பாக்கெட்டில் போடலாமா?  கிக் இன்னும் ஏத்தலாமா? என மிகத்தீவிரமாக சிந்திக்கின்றனர். வறுமைக்கோட்டிற்கு மேல் 25 கோடி மக்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு பிரதமர் மோடிதான் காரணம், கொரோனா காலங்களிலும் கூட பிரதமர் மோடியின் திட்டங்கள் தான் காரணம். ராகுலின் பொய்முகம் முழுமையாக தெரிந்ததே தவிர, முதிர்ச்சியின்மையும், படம் காண்பித்து படம் காட்டிக் கொண்டிருந்தார் நேற்று. சட்ட விதிகளில் இல்லை என்று சொன்ன பிறகும் எப்படி மீற முடியும்.


கள்ளக்குறிச்சி விசயத்தில் போராடிய பெண்களை கூட கைது செய்தனர். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளை முடக்கிவிட்டு, அவர்களை பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டு அதன் பின் அங்கு சென்று எதிர்க்கட்சிகளுக்கு உரிமை கொடுங்கள் என்கின்றனர். முதலில் நீங்கள் முன் உதாரணமாக இருங்கள் என்பது எனது கருத்து. 3 குற்றவியல் சட்டங்கள் அமித்சா சொல்வதை போல இது இந்தியத்துவமாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆக இந்த சட்டங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்படும் என்பதில் உங்களுக்கு ஒப்புதல் இல்லையா? புதிய கல்விக் கொள்கை என்பது பிரதமர் சொல்வதை போல மாணவர்களை வகுப்பறங்கிலிருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவது. எல்லா மாநிலங்களும் இதனை பின்பற்றும் பொழுது தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக எதிர்க்கிறார்கள், மாணவர்களிடம் இவர்கள் விளையாடுகிறார்கள் என்று பேசினார்.