தமிழக அரசின் இரண்டு சாதனையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக  கலந்துகொண்டு 68 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை பெறும் 500 பயனாளிகளுக்கு அதற்கான ஆணையை  வழங்கினார்.


மேலும் நெல்லை மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு நபர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக தலா ரூபாய் 4 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விழா பேருரையாற்றிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசும் பொழுது, “இந்த அரசு அமைவதற்கு முன்பு தமிழக முழுவதும் 4.38 லட்சம் மனுக்கள் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் கேட்டு கொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்தது. இந்த அரசு அமைந்த பின்னர் அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் 785 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. மகளிருக்கு  இலவச பேருந்து பயணத்திட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2.58 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இந்த சாமானிய  மக்களுக்காக தான் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது, முதல்வர் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். 


கடந்த ஆண்டு காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1440 பள்ளிகள் சேர்க்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு பல ஆயிரம் பள்ளிகள் சேர்க்கப்பட்டு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் காண உரிமை தொகை திட்டம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் அவர்களுக்கு பணம் வழங்கப்படும்.


கடந்த 23 மாதத்தில் 4 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது . பல பேர் பல விதமான விமர்சனங்களை அள்ளி தூவினாலும் எதற்கும் அஞ்சாமல் என் கடன் பணி செய்வது என ஒரு சாமானியனுக்கு தமிழ்நாட்டில் சாதி, மத, இன வேறுபாடின்றி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் தத்துவத்தை முன்னெடுத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார். திராவிட மாடல் தத்துவம் இந்தியா முழுவதும் பரவி அனைத்து மாநிலங்களும் தமிழகத்தின் திட்டங்களை பின்பற்றத் தொடங்கி விட்டார்கள். ஏழை எளிய மக்களைப் பற்றி முதல்வர் சிந்திக்கிறார். அதற்காக உழைக்கின்றார்.  இதற்கெல்லாம் சாட்சியே ஏழை எளிய மக்களுக்கான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவது” என அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண