கிளாம்பாக்கத்தில் அரசு விரைவுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையின் பிறப்பகுதியில் இருந்து இயக்கப்பட்டு விரைவு பேருந்துகளின் விவரங்களை இதில் காண்போம். 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு  வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையமானது கட்டப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தென் சென்னை மக்கள் சுலபமாக வந்து சென்றாலும் வட சென்னை சேர்ந்த மக்கள் 2 முதல் 3 மணி நேரங்கள் பயணம் செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைய வேண்டிய சூழல் நிலவி வருகிறது. 

மாதவரத்தில் இருந்து பேருந்துகள்: 

மக்களின் சிரமத்தை பார்த்த போக்குவரத்துறை மாதவரத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, கும்பகோணம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு TNSTC  பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் தொலைதூரம் செல்லும் அரசு விரைவு  பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் சென்னையின் புறநகரான ஆவடி, திருவெற்றியூர், திருவான்மியூர் ஆகிய இடங்களில் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ஆவடி மார்க்கம்: 

ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு மொத்தம் நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட சாதரண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

பேருந்து நேரம்: 

தடம் எண் வழி புறப்படும் நேரம்
184 V :  ஆவடி-செங்கோட்டை - கட்டணம் ரூ 650/1010 விழுப்புரம், திருச்சி, மதுரை, ராஜபாளையம் மாலை 05.30 மணி
170 A : ஆவடி - தூத்துக்குடி- கட்டணம் ரூ 620/955 விழுப்புரம், திருச்சி, மதுரை மாலை 06:00 மணி
180 A : ஆவடி- திருநெல்வேலி- கட்டணம் ரூ 630/995 விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவில்பட்டி மாலை 06:45(NSS) மற்றும் 07:30 மணி (UD)

திருவொற்றியூர் மார்க்கம்: 

திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், நாகர்கோவில் மற்றும் வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட சாதரண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

தடம் எண் வழி புறப்படும் நேரம்
191T : திருவொற்றியூர்-திருச்செந்தூர்-கட்டணம் ரூ 665/1035 விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி  மாலை 05.30 மணி
198T : திருவொற்றியூர் -நாகர்கோவில்- கட்டணம் ரூ 725/1125 விழுப்புரம், திருச்சி, மதுரை,திருநெல்வேலி மாலை 04:30 மணி 
324 T : திருவொற்றியூர்-வேளாங்கண்ணி- கட்டணம் ரூ 373/569 புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் இரவு: 08.15 மணி

திருவான்மியூர் மார்க்கம்: 

திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி, கோவை, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு மொத்தம் 6 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் இருக்கை மற்றும் படுக்கை உள்ள குளிர்சாதன வசதி கொண்ட சொகுசுப்பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது

தடம் எண் வழி புறப்படும் நேரம்
191:TAB(AC) : திருவான்மியூர்-திருச்செந்தூர்-கட்டணம் ரூ 840/1292 வேளச்சேரி, தாம்பரம்,விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி,  மாலை 06.30 மணி ( AC)
143 : திருவான்மியூர் - திருநெல்வேலி கட்டணம் ரூ 829/975(non ac) , 816/1253(AC) வேளச்சேரி, தாம்பரம்,விழுப்புரம், திருச்சி, மதுரை,திருநெல்வேலி

மாலை 05:00(AC).

இரவு07:00.07:30(AC),08:00மணி 

460 : திருவான்மியூர் -கோவை- கட்டணம் ரூ 669/1030 வேளச்சேரி, விழுப்புரம், சேலம் இரவு 07:00

பிராட்வே-திருநெல்வேலி:

இதுமட்டுமில்லாமல் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி மாலை 6 மணிக்கு ஒரு மிதவை பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த அனைத்து பேருந்துகளுக்கான முன்பதிவை https://www.tnstc.in/OTRSOnline/ என்கிற இணையதளம் மூலமும் TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். 

மேலும் மாதவரம் போன்ற பகுதிகளில் இருந்து கணிசமான அளவில் அரசு விரைவு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

ALSO READ | தாம்பரத்தில் இனி No டிராபிக்.. தென் மாவட்ட மக்களே கேட்டுக்குங்க.. இனி எல்லாம் கிளாம்பாக்கம் தான்..!