தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி ! சிக்கிய கைரேகை கொண்டு போலீசார் புலன் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கொலை கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது இதனை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள் , இருந்த போதிலும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு தொடர் குற்றங்கள் நடந்து வருகிறது குறிப்பாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் திணறி வருகின்றனர் , கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு தனிப்படைகள் அமைத்த போதிலும் அண்மைக்காலமாக இந்த வழக்குகளில் பெரும்பாலான குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல்தான் உள்ளது இந்த நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் சகோதரர் தெருவை சேர்ந்த தொழிலதிபர் விஜயகுமார் (வயது 60) தனது குடும்பத்தோடு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது வீட்டின் மாடி வழியாக புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து கொள்ளை யடிக்க முயன்றனர். வீட்டில் நகை, பணம் எதுவும் சிக்கவில்லை. சில்லறை காசுகள் மட்டுமே சிக்கி இருந்தது. அந்த சில்லறை காசுகளை பக்கத்துவீட்டில் வைத்துவிட்டு கொள்ளை யர்கள் தப்பி சென்று விட்டனர். இது குறித்து விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இரண்டு கைரேகைகள் சிக்கின.
அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படைபோலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளாடிச்சிவிளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் இரண்டு கிலோ வெள்ளி குத்துவிளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இந்த இரண்டு கொள்ளை சம்பவத்திலும் ஒரே கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இரண்டு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கைரேகை களையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்து வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந் துள்ளனர். போலீசார் இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.