ஆத்தாடி இது என்ன சோதனை.! இந்தாண்டு அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகளுக்கு கண்டாதி கண்டமாம்.! பீதியை கிளப்பிய ராமேஸ்வரம் பஞ்சாங்கம் வாசிப்பு.!!

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் கண்டம் உண்டாகும், பஞ்சாமபதி சனிபகவான் ராஜாவாக வருவதால் நீதி நேர்மை கடமை கண்ணியம் கட்டுபாடு சரியாக நடைபெறும்.

Continues below advertisement

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரையை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.கோவில் சார்பாக ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தை கோவில் குருக்கள் உதயகுமார் வாசிக்கப்பட்டதில் இந்த ஆண்டில் சுபகரன ஆண்டு பகலில் பிறப்பதால் அரசியல்வாதிகள் சட்டத்தின் பிடியில் சிக்குவர். முக்கியமான அரசில்வாதிகளுக்கு கண்டாதி கண்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ் புத்தாண்டான சித்தரை முதல் நாளான நேற்று ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சுவாமி அக்னிதீர்த்த கடற்கரைக்கு சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற பின்பு சுவாமி அம்பாள் நான்குரதவீதி வழியாக உலா வந்தது.இதையடுத்து கோவில் முதல் பிரகாரமான சுவாமி சன்னதி அருகே சிறப்பு பூஜைகள் செய்த பின் கோவில் சார்பாக ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கம் வாசித்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதணை நடைபெற்றது. இதையடுத்து கோவில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்த போது:-இந்தியாவுக்கு அயல்நாடுகளுடன் ஓத்துழைப்பு கிடைக்கும்.காட்டில் உள்ள விலங்குகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் கண்டம் உண்டாகும், பஞ்சாமபதி சனிபகவான் ராஜாவாக வருவதால் நீதி நேர்மை கடமை கண்ணியம் கட்டுபாடு சரியாக நடைபெறும். வடநாடு வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கும். விவசாய நிலங்கள் நன்றாக அறுவடையாகும்.


ஐப்பசி மாதம் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏரிகளில் நீர் மோதி போகும். பழைய கோவில் சொத்துகளை அரசாங்கம் கையகப்படுத்தும். அறநிலைத்துறையில் பல மாற்றங்கள் ஏற்படும். இந்தாண்டு 19 காற்றழுத்த வாழ்வு மண்டலங்கள் உற்பத்தி ஆகி 12 காற்றழுத்த மண்டலங்கள் பலகீனம் ஆகி 7 காற்றழுத்த மண்டலங்கள் புயலாக மாறி சென்னை, செங்கல்பட்டு, மாமல்லபுரம், பாண்டி, கடலூர், விழுப்புரம், பன்ரூட்டி, மாயவரம், கும்பகோணம், நாகபட்டிணம், திருவாரூர், கடலூர், கடலோர மாவட்டமான நெல்லூர், காட்டுமுந்திரி, விஜயவாடா,  ஓரிசா,  அந்தமான் ஆகியவைகளை தாக்கும். மேலும், புதிய வியாதி உற்பத்தி ஆகும்.தங்கம், வெள்ளி,  செம்பு ஆகியவை  விலையில்லாத வியாபாரமாக அமையும்.புதிய கோவில்கள் கட்டுவதற்கு அரசாங்கம் புதிய சட்டம் கொண்டு வரும். பெட்ரோல் விலை உச்சத்தை தொடும். போக்குவரத்து, மின்சார கட்டணம் கடுமையாக உயரும்.புதிய வரிகளை விதிக்க அரசாங்கம் நேரிடும். புதிய ரக வைரஸ் கிருமி வேகமாக பரவும். மலைவாழ் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும். அசைவ உணவங்கள் நஷ்டத்தில் இயங்கும்.காட்டு விலங்குகளை வேட்டையாடுவோர் கடுமையான தண்டனைக்கு ஆளாவர். 


இந்தாண்டு இரண்டு சூர்ய சந்திர கிரகணம் வரும்.சூர்யகிரகணம் 25.10.22 செவ்வாய்க்கிழமை மாலை 5.14 க்கு தொடங்கி 6.10 வரை இருக்கும்.சந்திர கிரகணமானது 8.12.22 செவ்வாயக்கிழமை பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.39 வரை இருக்கும் என கோவில் பஞ்சாங்க வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் மேலாளர் ஸ்ரீனிவாசன் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் பேஷ்கார் கமல்நாதன் முனியசாமி இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் ராமமூர்த்தி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் பாஜக நிர்வாகி சுந்தரமுருகன் மற்றும் கோவில் ஊழியர்கள்  உடனிருந்தனர்.

Continues below advertisement