ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்துவிட்டு வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு ராட்சத அலையில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. படகில் இருந்த மூவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மீனவர் மாயம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிட்டது. அந்த வகையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 60 நாட்கள் தடை காலம் முடிந்து நேற்று மீன்பிடி மீனவர்கள் சென்றனர். இந்நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக அவர்கள் கரை திரும்ப அரசு எச்சரிக்கை விடுத்துள்ளனர் அந்த வகையில் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் இதற்கிடையே கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கரை திரும்பிய விசை படகு ஒன்று ராட்சத அலையில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது படகில் இருந்த மூவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மீனவர் மாயமான நிலையில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குளச்சல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நேற்று முன்தினம் சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்கள் , இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பை கேரளா அரசு முன் கூட்டியே அறிவித்ததுபோல தமிழக அரசும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி கொடுத்ததால் இந்த அறிவிப்பு பயன்படாது என மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் காலதாலகமான நடவடிக்கைகளால் மிகப்பெரிய ஆபத்துகளை உயிரிழப்புகளை நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம் மீண்டும் தமிழக அரசு அதேபோன்று தவறுகளையே செய்து வருவதாக மீனவ அமைப்புகள் கடும் குற்றச்சாட்டு உள்ளனர் ஆழ் கடலில் உள்ள மீனவர்களை இந்த அரசு எப்படி எச்சரிக்கை தகவலை கொண்டு சேர்க்கும்? அவர்களை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகளை மீனவ அமைப்புகள் அரசுக்கு முன் வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான கொல்லங்கோடு, பொழியூர் கடற்கரை பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஐம்பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்.
தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை நீடித்து வரும் நிலையில் அரபி கடலிலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குமரி மேற்கு கடற்கரை பகுதியான அரபி கடலில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் ,கரையோரம் உள்ள மீனவர்களின் வீடுகளில் அவ்வப்போது கடல் நீர் சூலும் நிலை ஏற்படும் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்கையான கொல்லம் கோடு, பொழியூர், பூவார்,போன்ற பகுதிகளில் ஐம்பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தன, தொடர்ந்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர், அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் மாற்று இடங்களில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.