தமிழகத்தில் 100க்கும் அதிகமான இந்து கோயில்கள் மறைந்து விட்டதாக  பொன்.மாணிக்கவேல் பகீர் புகார் தெரிவித்தார். பழமையான கோயில்களை பாதுகாக்க தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.




ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள கோசுவாமி மடத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் 53-வது ஆலய வழிபாட்டு பயிற்சி முகாமானது கடந்த 2ந்தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில்  பயிற்சி நிறைவடைந்தது. இதில், கடவுள்களுக்கு கூறும் உகந்த மந்திரமான காயத்ரி மந்திரம், அர்ச்சனை மந்திரம், தியான ஸ்லோகங்கள், அபிஷேக முறைகள் கோவில் வழிபாடு குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், 15 நாட்கள் பயிற்சி முடிந்த பிறகு பயிற்சி நிறைவு நாளில் அவர்களுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு பயிற்சிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.




இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், பின்னர்  செய்தியாளர்களிடம் பேசுகையில், “அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டதாக அறிக்கை வெளியிடும்  அறநிலையத்துறை மொத்தம் எவ்வளவு ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஏன் இதுவரை வெளியிடவில்லை என கேள்ளி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை பாதுகாக்க அரசு தமிழக தொல்லியல் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,கூடுதல்  நிதி ஒதுக்கப்பட்டு கோவில்கள், கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்டால் தமிழரின் பாரம்பரியம் மற்றும் தொன்மை அழியாமல் பாதுகாக்கப்படும்” என்றார்.  




மேலும், ”தமிழகத்தில் நூற்றுக்கும் மேலான கோயில்களில் மறைந்து விட்டன. இந்த மறைந்து கோயில்களின் மூலவர்கள், உற்சவர்கள், இதர தெய்வங்கள், கோயில்களில் உள்ள கற்களை கூட விடாமல் திருடி விற்கப்பட்டதால் இந்த கோயில்கள் முற்றிலும் தமிழ் மண்ணிலிருந்து மறைந்தே போய் விட்டது.தமிழக கோயில்களில் 3.5 லட்சம் உலோக சிலைகள் உள்ளன. அவற்றை அரசு பதிவு செய்ய வேண்டும். சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள 2,500 தெய்வ சிலைகள் உள்ளன. இவை எல்லாம் கோயில்களில் நிரந்தரமாக இருக்க வேண்டியவை” எனத் தெரிவித்தார்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண