’’நெல்லையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசை பணியில் ஈடுபட்டுத்த திட்டம்’’

’’உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது’’

Continues below advertisement

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைகள் நடைபெற்று முடிந்தது.

Continues below advertisement


நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 13 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 85 பேரும், 9 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 59 பேரும், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 237 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை 689 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 30 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 200 பேரும், 14 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு 122 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி பேசினார்.


 
அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நடுநிலை வாக்குச்சாவடி, முக்கிய வாக்குச்சாவடி, மிக முக்கிய வாக்குச்சாவடி என பிரித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் நிலவரங்களை கண்டறிந்து பிரச்சினைகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினார். இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Continues below advertisement