தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர்கள் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் என 4973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்ட நபர்கருக்கு 41 லட்சம் ரூபாய் சமரசத் தொகை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி சந்திரா செய்தியாளர்களுக்கு அளித்தார், அப்போது பேட்டியில் கூறியதாவது, "நெல்லை மாவட்டத்தில் 10 தாலுகாவில் 27 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரே நாளில் 4973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு எளிய முறையில் அவர்களது வழக்குகளில் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் வரை நிலுவையில் உள்ள 5771 வழக்குகளில் 3595 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இதில் 6 கோடியே 54 லட்சத்து 10 ஆயிரத்து 751 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று நிலுவையில் இல்லாமல் நேரடியாக வந்த 251 வழக்குகளில் 144 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் 54 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்