நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த அதிநவீன கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து அவர்களுக்கு ஆறுதலும் நிவாரணமும் கொடுக்க வந்துள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணன் அரசு வழங்க வேண்டும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேரும் அடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகள் தோறும் கணக்கெடுத்து 25,000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம் எங்கு எங்கு மழை பெய்யும் எவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையை முறையாக வழங்கி உள்ளது. அரசு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். எடுக்க தவறி விட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சுமத்துவது தவறானது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை எந்த அளவு பாதிப்பு இருந்திருக்கிறது என்பதை அவர்கள் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது எண்ணம் மக்களுக்கு இல்லை. வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்டுவதை பொதுமக்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். சென்னையை விட தென் மாவட்டங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு 25000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். வாஷிங் மெஷின் டிவி உள்ளிட்ட பொருட்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது அதனையும் கணக்கெடுத்து பொருட்களையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி புரியும் நேரத்தில் மத்திய அரசு நிதி வழங்கும் முன்பே மக்களுக்கு எந்த மாதிரியான நிதி அளித்தால் மக்கள் சந்தோசமடைவார்கள் என்பதை திட்டமிட்டு மக்களுக்கு வழங்கினர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னுதாரணமாக எடுத்து அரசு செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.