நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட ஒரு சில இடங்களில் குடிநீர் பிரச்னைகள் இருக்கும் சூழலில் பொதுமக்கள் அவ்வப்போது ஆட்சியர் அலுவலகத்தில் முறையிடுவது மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்வது என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 32வது வார்டில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 32வது வார்டுக்குட்பட்ட நந்தனார் தெரு, ஜோதிபுரம், லட்சுமி நரசிம்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.  இதனால் வேறு இடத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வரும் சூழல் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். மேலும் தங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் இல்லாத காரணத்தினால் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி மிகுந்த இன்னலை அனுபவித்து வருகிறோம்.


 




இதுகுறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் என பலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பெண்கள் கூறும்போது, "எங்கள் பகுதியில் கடந்த ஆறு மாதமாக குடிநீர் வரவில்லை. மேலும் நிலத்தடி நீரும் கிடையாது. இதனால் நாங்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். லாரிகளில் வரும் தண்ணீர் ஒரு வீட்டிற்கு இரண்டு குடங்கள் மட்டுமே தருவதால் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். குறிப்பாக அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் என அனைவரும் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். உரிய நேரத்திற்கு அவர்களால் செல்ல இயலாத சூழலும் உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைவரும் திரண்டு பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முன்பாக விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண