நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஆட்சியர்  முன்னிலையில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில விழிப்புணர்வு நாடகம் மற்றும் பாடல் ஒன்று பாடி அசத்தினர். நிகழ்ச்சிக்கு பின்னர் ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 


 




நெல்லை மாவட்ட தொடக்க கல்வி இயக்கத்தின் சார்பாக முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம்  ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022 - 23 ஆம் ஆண்டு மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வகையில் மாவட்டம், வட்டாரம் மற்றும் பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு பேரணிகள், இல்லம் தேடி சென்று பெற்றோர்களை சந்தித்தல் என அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி பயிலும் நன்மைகளை விளக்கும் விதமாக பேரணி தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட சுமார் 5522 குழந்தைகளும், ஆறாம் வகுப்பில் 4554 மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பில் 5651 மாணவர்களும், 11ஆம் வகுப்பில் 6793 மாணவர்களும் அரசுப் பள்ளியில் சேர்ந்து பயனடைவார்கள்.


 




இதன் தொடர்ச்சியாக பொதுமக்களை சந்தித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் இலவச கல்வி, உயர் கல்வி மற்றும் இட ஒதுக்கீடு குறித்த சிறப்பு பயிற்சியை பற்றி கூறும் வகையில் வண்ணார்பேட்டை, பாளை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையமாகிய  பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்துள்ளோம். இதே போல் ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பாக ஊரக பகுதிகளிலும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்தார். ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது போன்ற புகார் நெல்லை மாவட்டத்தில் இல்லை. இந்த ஆண்டு மாணவர்கள் அதிக ஆர்வமுடன் உள்ளனர். குறிப்பாக நகரப்பகுதிகளில் வழக்கமாக அரசு பள்ளியில் சேர அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் இந்த ஆண்டு நகர் பகுதியில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண