இன்று அதிகாலை ஊட்டியில் இருந்து நெல்லை நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அதே நேரம் நெய்வேலியில் இருந்தும் நெல்லை நோக்கி அரசு சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தது. குறிப்பாக இரண்டு பேருந்து பேருந்துக்களும் நெல்லை தச்சநல்லூர் அடுத்த கரையிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஊட்டியில் இருந்து வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதனை தொடர்ந்து அதன் பின்னால் நெய்வேலியில் இருந்து வேகமாக வந்த சொகுசு பேருந்து தடுப்புச் சுவரில் மோதிய பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஊட்டியில் இருந்து வந்து பேருந்து சாலையின் நடுவே சரிந்து விழுந்தது. இந்த பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து உடனே தச்சநல்லூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த தச்சநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டர். அதோடு அப்பகுதியில் இருந்து மக்கள் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலையில் கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விபத்து நடந்த சாலை அனைத்து வாகனங்களும் செல்லக்கூடிய பிரதான சாலையாகும். குறிப்பாக சாலையில் நடுவே அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் தச்சநல்லூர் கரையிருப்பு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் அனுமதிக்கப்பட்டது. அதிகாலை நடந்த இந்த விபத்து சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்