கடந்த 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அதிமுக அரசு 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கைத்தறி  உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்த போது கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 94.88 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி இவர்களுக்கு உறுதுணையாக இருந்ததாக தொழில் அதிபர் சண்முக மூர்த்தி உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.


இவ்வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் அமைச்சர் உள்ளிட்டவர்களை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஒரு சில குழப்பங்கள் இருப்பதாகவும், ஆகையால் மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வழக்கில் இருந்து அமைச்சர் உள்ளிட்டவரை விடுவிக்க சுமார் 26 ஆவணங்கள் 2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தமுள்ள 26 ஆவணங்களில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான திரையரங்கம் விற்பனை செய்தது உள்ளிட்ட 10 ஆவணங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


அந்த ஆவணங்களின் அடிப்படையில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்க்கவில்லை என்பது தெரிய வந்ததையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இவ்வழக்கை முடித்து வைக்க மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணை கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற நிலையில் இன்று தற்போதைய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்ததாக தொழில் அதிபர் சண்முக மூர்த்தி உள்ளிட்ட மூவரையும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி திலகம் உத்தரவிட்டார். கடந்த 10 வருடமாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதே போல 2006-11 கால கட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழக்கில் இருந்தும் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண