கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக நெல்லை தூத்துக்குடி பகுதிகளில் இருந்து அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கேரளாவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான டாரஸ் லாறிகள் சென்று வருகின்றன. அதிக பாரத்துடன் இந்த டாரஸ் லாறிகள் செல்வதால் சாலைகள் சேதமடைவதோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது தற்போது நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் சேதமடைந்த நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் சேதமடையாமல் இருக்கவும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கவும், அதிக பாரத்துடன் வரும் டாரஸ் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.



 

நேற்று மார்த்தாண்டம் பகுதியில் டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் தொடர்ச்சியாக இன்று இன்று காலை நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் டாறஸ் லாறிகளை சப் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான தனிப்படை போலீசார் தக்கலையில் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 11-டாறஸ் லாறிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

 



நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டுவந்த கொரோனா வார்டு மூடல்



 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் களப்பணியாளர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 3444 பேரின் சளி மாதிரிகளைபரிசோதனை செய்தனர். இதில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 42 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79416 ஆக அதிகரித்துள்ளது.



 

இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டுவந்த கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த மக்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் இருந்ததனதால் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு கோவிட் கேர் மையங்களில் குறைவான அளவிலேயே மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில் தினசரி பாதிப்பு வெகுவாக குறித்து உள்ளதால் கோவிட் கேர் மையங்களை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.