கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான்க்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. பொதுவாக பாஜக ஆளாத மாநிலத்தில் கவர்னர்களை கொண்டு அங்கு ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு பல்வேறு குடைசல்கள் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் கேரள ராஜ்பவன் பிஆர்ஓ போட்ட டிவிட் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது 

 

அமைச்சர்கள் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் முழு உரிமை உண்டு. ஆனால் கவர்னர் பதவிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டால், அமைச்சர் பதவியை திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரிக்கை அடங்கிய ஆளுநரின் அறிக்கையை ராஜ்பவன் பிஆர்ஓ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கடந்த தினம் வெளியிட்ட அறிக்கையினால் ஆளுநர் கோபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஆர்எஸ்எஸ்தான் ஆளுநரின் அஜெண்டா. முடிவு செய்ததை செயல்படுத்துவது தான், பல்கலை கழகம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலையை தவிர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. பல்கலை சட்ட திருத்த மசோதாவை தடுத்தவர் கவர்னர்' - இவ்வாறு அமைச்சர் ஆர்.பிந்து விமர்சித்தார்.

 

ஆளுநரின் உத்தரவை தொடர்ந்து கடந்த தினம் கேரள பல்கலைக்கழகத்தில் அழைக்கப்பட்ட கூட்டத்தில் மொத்தம் 13 வேந்தர் நாமினிகளில் 11 பேர் கலந்து கொள்ளவில்லை. 21 உறுப்பினர்கள் பங்கேற்றால் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் இவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் கவர்னருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கவர்னர் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.