கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு மார்தாண்டம்துறை பகுதியை சேர்ந்த ஆபிரகாம் என்ற மீன்பிடி தொழிலாளி மனைவி ஜெனட் 38 இவர் பாலவிளை சரக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் நேற்று காலை கடைக்கு பொருட்கள் வாங்க சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கழற்ற சொல்லி மிரட்டி உள்ளனர் கையில் பர்சில் இருந்த 500 ரூபாயை பறித்து உள்ளனர்.

 


கன்னியாகுமரியில்  கத்தி முனையில் பெண்ணிடம் நகைபறிக்க முயன்ற 2 பேர் கைது 

 

உடனே சத்தம்போடவே அந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் சம்ப இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அந்த இருசக்கர வாகனம் சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். நேற்று இரவு நடைகாவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இருவரை போலீசார் பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், காஞ்சாங்குடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) கச்சேரிநடை பகுதியை சேர்ந்த அனிஷ் (29) என்பதும் தெரியவந்துள்ளது.

 



 

இவர்கள் பல நாட்களாக நோட்டமிட்டு கடந்த 21 தேதி இவரிடம் நடந்த நகை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் இவர்கள் மீது பல காவல்நிலையங்களில் பலவழக்குகள் உள்ளதும் குறிப்பிடதக்கது இவர்கள் மீது மீண்டும் வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.