பள்ளிகள் திறந்து மாதம் ஒன்று ஆன பின்பும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல தயக்கம் காட்டுவதை ஆங்காங்கே காண முடிகிறது. பள்ளிக்கூடம் என்றாலே பயந்து நடுங்கி, வேண்டாம் வேண்டாம் என கதறி அழுவதையும், அதனால் காய்ச்சல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பும் ஏற்படும் சம்பவங்களும் சில மாணவர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பள்ளிக்கு செல்ல மறக்கும் குழந்தைகள் தொடர்பான ஏராளமான வீடியோக்கள் விதவிதமாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கன்னியாகுமரி சிறுவனின் வீடியோ வைரல்:
அதே போன்று தான் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவனின் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் - ஜெனிஃபர் தம்பதியரின் ஒரே மகனான காட்சன் பெட்ரோஸ் என்ற மாணவன் நடப்பு கல்வியாண்டில் எல் கே ஜி வகுப்பில் சேர்க்கப்பட்ட நிலையில், பள்ளி திறந்து இரண்டாவது நாளிலிருந்து தினம் தோறும் அழுதபடியே பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார். பள்ளிக்கு செல்ல வேண்டும் என பெற்றோர் கூறினாலே அவர் வேண்டாம் என அழுகுகிறார். அதையொட்டி, அவர் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம்பிடித்து அழுத வீடியோ ஒன்று தற்போது வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்