கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெல்டிங் தொழிலாளி வினோத் என்பவர் பணியின் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் அதே பகுதியில் வெல்டிங் தொழிற்கூடத்தில் தினக்கூலியாக பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரும்பு கதவு செய்யும் பணி மேற்கொண்டு இருந்த போது மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்தில் வினோத் சுருண்டு விழுந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த சக ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இந்நிலையில் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது அபூர்வ சூரிய ஒளி விழுவதை நாளை பார்க்கலாம்.
1948-ம் ஆண்டு ஜனவரி மாதம்30-ந்தேதி டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சென்றபோது கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்12-ந் தேதி கன்னியாகுமரி எடுத்துவரப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக அவரது அஸ்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி கடற்கரை யில் வைக்கப்பட்டது. அவரது அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் அதை நினைவு கூறும் வகையில் காந்தி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நினைவு மண்டபத் துக்கு 1954-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி ஆச்சாரியாகிருபளானியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் இந்த மண்டபம் 1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி அப்போதைய கேரள கவர்னர் பி.எஸ்.ராவ் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி மரணம் அடையும் போது அவரது வயது 79. அவரது வயதை குறிக்கும் வகையில் இந்த மண்டபம்79அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவு மண்ட பத்தில் உள்ள காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும். காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண அன்றைய தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். அதேபோல இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி யானவருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி காந்திநினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம்.
தமிழக அரசின் சார்பில் மகாத்மா காந்தி 182- வது பிறந்தநாள் விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி காலை 11 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் நடக்கிறது. விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரகிரண் பிரசாத், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்