Nellai Kannan: “6 வயதிற்குள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது” - முதல்வருக்கு நெல்லை கண்ணன் வேண்டுகோள்

”எல்லா நல்லவர்களையும் பார்த்தாச்சு, காமராஜரைப் போல்  முழு நல்லவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறவர் ஸ்டாலின், அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்”

Continues below advertisement

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து பொருநை நெல்லை 5 வது புத்தகத்திருவிழாவை நடத்தி வருகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வழக்கமாக புத்தகக்கண்காட்சி என்றால் லட்சக்கணக்கான புத்தகங்கள் மட்டும் ஸ்டால்களில் விற்பனை செய்யப்படும். ஆனால் நெல்லை புத்தக கண்காட்சியை மாபெரும் திருவிழாவாக நடத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை மேற்கொண்டார், 

Continues below advertisement


அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 11 நாட்களும் 24 மணி நேர தொடர் வாசிப்பு சாதனை நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதில் சுழற்சி முறையில் வாசிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. அதன்படி உலக சாதனைக்கான புத்தக வாசிப்பில் பங்கேற்க மாணவர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் முன்பதிவு செய்து பங்கேற்கின்றனர். கண் தெரியாதவர்களும்,  காது கேளாதவர்களும் இதில் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்தனர். பத்தாம் நாளான இன்று வள்ளியூர், பேட்டை பகுதியைச் சார்ந்த நரிக்குறவர் குழந்தைகள் இந்தப் புத்தக வாசிப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தும், படங்கள் வரைந்தும் இதில் பங்கேற்றனர். விளிம்புநிலை மக்களும் புத்தக வாசிப்பில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. கலந்து கொண்ட  மாணவர்களுக்கு பூங்கொத்துகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.


புத்தக திருவிழாவில் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் கருத்தரங்கம் தினமும் நடைபெற்று வருகிறது. பேச்சாளர் நெல்லை கண்ணன் கருத்தரங்கில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, "எல்லா நல்லவர்களையும் பார்த்தாச்சு, காமராஜரைப் போல்  முழு நல்லவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறவர் ஸ்டாலின், அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஒரு நல்ல முதலமைச்சர், நிறைய முயற்சி செய்கிறார். அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழகத்தின் குழந்தைகள் ஆறு வயதிற்குள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்ற ஒரு ஆணையை பிறப்பிக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாத்து தாருங்கள்; குழந்தைகள் நமது எதிர்கால செல்வங்கள். அவர்களை இந்தப் பள்ளி கூடங்கள் முளையிலேயே கருக்கிவிடும். அதுபோல புத்தக கண்காட்சி என்ற வார்த்தையை முதலில் எதிர்த்தவன் நான், புத்தகம் என்பதே வடமொழி, இதனை படைப்பாளிகளின் சங்கமம் என அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன், புத்தகத்திருவிழாவில் புத்தகத்தை வாங்க வேண்டும். அதனைப் படிக்க வேண்டும் எது தேவையோ அதை படிக்க வேண்டும்” என பேசினார்    

Continues below advertisement