கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை என்பதால் மது  வாங்க வந்த மது பிரியர்கள் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் 22 டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள்(பார்கள்) செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் மதுபானங்கூடங்கள் எடுத்துவர்களிடம் கரூரை சேர்ந்த ஒரு கும்பல்  மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட  மாமூல் தொகை கேட்பதாகவும், அதற்கு மதுபான கூடங்களை எடுத்தவர்கள் தர மறுத்துள்ள நிலையில் நேற்று திடீரென சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பார் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




இதனால் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.  இதற்கிடையில் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை என்பதால் மது  வாங்க வந்த மது பிரியர்கள் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது கட்டணம் செலுத்தவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் டாஸ்மாக் மதுபான கூடங்களை சேர்ந்தவர்கள் அடுத்த மாதம் 4 ந்தேதி வரைக்கு டிடி எடுத்து கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.கரூர் கும்பலுக்கு கேட்ட தொகையை மாமூலாக தரவில்லை என்பதால் இது போன்ற நடவடிக்கை எடுத்து தங்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.